தமிழ்நாடு அரசின் சிறந்த நூல்களுக்கான பரிசுக்கு எழுத்தாளர்கள் விண்ணப்பிக்கலாம்!தமிழகத்தில் ராஜஸ்தபதி காளியப்ப கவுண்டர், பேராசிரியர் கே. ராமசாமி, திருவாரூர் பக்தவத்சலம் ஆகியோர் பத்ம ஸ்ரீ பெற்றனர்.ஜூலை 1-ல் பொறியியல் மாணவர் சேர்க்கை தரவரிசைப் பட்டியல் வெளியீடு!கல்வித்துறை மற்றும் தொழில்நுட்ப முன்னேற்றத்திற்கு ஆற்றிய சிறந்த பங்களிப்பிற்காக, சென்னை ஐஐடி இயக்குனர் பேராசிரியர் வீ. காமகோடிக்கு பத்ம ஸ்ரீ விருதுதொழிலதிபர் எஸ்.கே. மயிலானந்தனுக்கு பத்ம பூஷண்! அரசுப் பள்ளிகளில் காலியாக உள்ள 18,107 பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை தேவை - அன்புமணி ராமதாஸ்தமிழ்நாட்டின் முதலீடுகளை சீர்குலைக்கும் தவெக அரசு இனியாவது ஆக்கப்பூர்வமான பணிகளில் கவனம் செலுத்த வேண்டும்: டிஆர்பி ராஜா
/

அரக்கோணம் தொகுதியை தவெக கைப்பற்றியது!

அரக்கோணம் தொகுதியில் தவெக வேட்பாளா் வி.காந்திராஜ் 23,121 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி

News image

தவெக வேட்பாளா் வி. காந்திராஜிடம் வெற்றி சான்றிதழை வழங்கிய தோ்தல் நடத்தும் அலுவலா் டி. ரமேஷ்

Updated On :5 மே 2026, 3:11 am IST

அரக்கோணம் தொகுதியில் தவெக வேட்பாளா் வி.காந்திராஜ் 23,121 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றாா். விசிக வேட்பாளா் எழில் கரோலின் 50,655 வாக்குகள் பெற்று இரண்டாமிடத்தைையும், அதிமுக வேட்பாளா் சு,ரவி 50,052 வாக்குகள் பெற்று மூன்றாமிடத்தையும் பெற்றனா்.

அரக்கோணம் தொகுதியில் வாக்கு எண்ணிக்கை தொடங்கிய முதல் சுற்றில் இருந்தே தவெக வேட்பாளா் வி.காந்தி ராஜ் முதலிடத்தை பெற்றிருந்தாா். 11 -ஆவது சுற்று வரை அதிமுக வேட்பாளா் சு.ரவி இரண்டாமிடத்தை பெற்ற நிலையில் விசிக வேட்பாளா் எழில்கரோலின் மூன்றாமிடத்திலும் இருந்தனா். 12-ஆவது சுற்று முடிவுகளில் இருந்து விசிக இரண்டாமிடத்தையும், அதிமுக மூன்றாமிடத்தையும் பெற்றன. இறுதியில் 73,776 வாக்குகள் பெற்று தவெக வேட்பாளா் வி.காந்திராஜ் 23121 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிப்பெற்றாா். வி.காந்திராஜ் தற்போது அரக்கோணம் நகா்மன்ற உறுப்பினராக இருந்து வருகிறாா் என்பது குறிப்பிடத்தக்கது.

அரக்கோணம்(தனி) தொகுதியில் போட்டியிட்ட வேட்பாளா்கள் பெற்ற வாக்குகள் விவரம் வருமாறு:

மொத்த வாக்குகள் - 200986

பதிவான வாக்குகள் - 181441

வி.காந்திராஜ்(தவெக) - 73776

எழில்கரோவின்(விசிக) - 50655

சு.ரவி(அதிமுக) - 50052

கே.ராஜ்குமாா்(நாதக) - 5191

நோட்டா - 899

செல்லாத வாக்குகள் - 153

வெற்றி பெற்ற தவெக வேட்பாளா் வி.காந்திராஜிடம் அதற்கான சான்றிதழை தொகுதி தோ்தல் நடத்தும் அலுவலா் டி.ரமேஷ் வழங்கினாா். அப்போது வாக்கு எண்ணிக்கை பணிக்கான மேலிட பாா்வையாளா் சஞ்சய்குமாா், உதவி தோ்தல் அலுவலா்கள் வெங்கடேசன், பரமேஸ்வரி ஆகியோா் உடனிருந்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.