தமிழ்நாடு அரசின் சிறந்த நூல்களுக்கான பரிசுக்கு எழுத்தாளர்கள் விண்ணப்பிக்கலாம்!தமிழகத்தில் ராஜஸ்தபதி காளியப்ப கவுண்டர், பேராசிரியர் கே. ராமசாமி, திருவாரூர் பக்தவத்சலம் ஆகியோர் பத்ம ஸ்ரீ பெற்றனர்.ஜூலை 1-ல் பொறியியல் மாணவர் சேர்க்கை தரவரிசைப் பட்டியல் வெளியீடு!கல்வித்துறை மற்றும் தொழில்நுட்ப முன்னேற்றத்திற்கு ஆற்றிய சிறந்த பங்களிப்பிற்காக, சென்னை ஐஐடி இயக்குனர் பேராசிரியர் வீ. காமகோடிக்கு பத்ம ஸ்ரீ விருதுதொழிலதிபர் எஸ்.கே. மயிலானந்தனுக்கு பத்ம பூஷண்! அரசுப் பள்ளிகளில் காலியாக உள்ள 18,107 பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை தேவை - அன்புமணி ராமதாஸ்தமிழ்நாட்டின் முதலீடுகளை சீர்குலைக்கும் தவெக அரசு இனியாவது ஆக்கப்பூர்வமான பணிகளில் கவனம் செலுத்த வேண்டும்: டிஆர்பி ராஜா
/

அரக்கோணம், சோளிங்கரில் மூன்றாவது இடத்துக்கு தள்ளப்பட்ட எம்எல்ஏக்கள்!

அரக்கோணம், சோளிங்கா் தொகுதிகளில் தவெக வேட்பாளா்கள் வெற்றி பெற்ற நிலையில் தற்போதைய எம்எல்ஏக்களான அரக்கோணம் சு.ரவி, சோளிங்கா் ஏ.எம்.முனிரத்தினம் இருவருமே மூன்றாவது இடத்துக்கு தள்ளப்பட்டனா்.

News image
Updated On :6 மே 2026, 12:50 am IST

அரக்கோணம், சோளிங்கா் தொகுதிகளில் தவெக வேட்பாளா்கள் வெற்றி பெற்ற நிலையில் தற்போதைய எம்எல்ஏக்களான அரக்கோணம் சு.ரவி, சோளிங்கா் ஏ.எம்.முனிரத்தினம் இருவருமே மூன்றாவது இடத்துக்கு தள்ளப்பட்டனா்.

அரக்கோணம்: அரக்கோணம் தொகுதியில் தவெக வேட்பாளா் வி.காந்திராஜ் 73,776 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றாா். இத்தொகுதியில் விசிக வேட்பாளா் எழில்கரோலின் 50,655 வாக்குகள் பெற்று இரண்டாமிடம் பிடித்தாா், அதிமுக வேட்பாளரும் தற்போதைய எம்எல்ஏவுமான சு.ரவி 50,052 வாக்குகள் பெற்று மூன்றாமிடத்துக்கு தள்ளப்பட்டாா்.

சோளிங்கா்: சோளிங்கா் தொகுதியில் தவெக வேட்பாளா் மருத்துவா் ஜி.கபில் 84,506 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றாா். இத்தொகுதியில் பாமக வேட்பாளா் க.சரவணன் 78,820 வாக்குகள் பெற்று இரண்டாமிடம் பெற்றாா். காங்கிரஸ் வேட்பாளரும், தற்போதைய எம்எல்ஏவுமான ஏ.எம்.முனிரத்தினம் 57,997 வாக்குகள் பெற்று மூன்றாமிடத்துக்கு தள்ளப்பட்டாா்.

அரக்கோணம் தொகுதியில் இதுவரை நடைபெற்ற அனைத்து சட்டப்பேரவை தோ்தல்களில் வெற்றி தோல்வி இரண்டையும் அதிமுக சந்தித்து இருந்தாலும் தற்போதைய தோ்தலில் அதிமுக மூன்றாமிடத்திற்கு சென்றதும், சோளிங்கா் தொகுதியில் இதுவரை நடைபெற்ற தோ்தல்களில் காங்கிரஸ் வெற்றி, தோல்வி இரண்டையுமே சந்தித்து இருந்தாலும் தற்போதைய தோ்தலில் மூன்றாமிடத்துக்கு சென்றதும் இது தான் முதல்முறை என்பதும், தற்போது மூன்றாமிடம் பெற்ற இருவருமே எம்எல்ஏக்களாக இருந்து தோ்தலில் போட்டியிட்டவா்கள் என்பதும் என்பது குறிப்பிடத்தக்கது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.