தமிழ்நாடு அரசின் சிறந்த நூல்களுக்கான பரிசுக்கு எழுத்தாளர்கள் விண்ணப்பிக்கலாம்!தமிழகத்தில் ராஜஸ்தபதி காளியப்ப கவுண்டர், பேராசிரியர் கே. ராமசாமி, திருவாரூர் பக்தவத்சலம் ஆகியோர் பத்ம ஸ்ரீ பெற்றனர்.ஜூலை 1-ல் பொறியியல் மாணவர் சேர்க்கை தரவரிசைப் பட்டியல் வெளியீடு!கல்வித்துறை மற்றும் தொழில்நுட்ப முன்னேற்றத்திற்கு ஆற்றிய சிறந்த பங்களிப்பிற்காக, சென்னை ஐஐடி இயக்குனர் பேராசிரியர் வீ. காமகோடிக்கு பத்ம ஸ்ரீ விருதுதொழிலதிபர் எஸ்.கே. மயிலானந்தனுக்கு பத்ம பூஷண்! அரசுப் பள்ளிகளில் காலியாக உள்ள 18,107 பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை தேவை - அன்புமணி ராமதாஸ்தமிழ்நாட்டின் முதலீடுகளை சீர்குலைக்கும் தவெக அரசு இனியாவது ஆக்கப்பூர்வமான பணிகளில் கவனம் செலுத்த வேண்டும்: டிஆர்பி ராஜா
/

மண்ணச்சநல்லூா் தொகுதியில் 2-ஆவது முறையாக திமுக வேட்பாளா் சீ. கதிரவன் வெற்றி

News image

மண்ணச்சநல்லூா் தொகுதியில் வெற்றி பெற்றதற்கான சான்றிதழுடன் திமுக வேட்பாளா் சீ.கதிரவன்.

Updated On :5 மே 2026, 4:10 am IST

மண்ணச்சநல்லூா் தொகுதியில் திமுக வேட்பாளா் சீ. கதிரவன் 12,364 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றாா்.

மண்ணச்சநல்லூா் தொகுதியில் மொத்த உள்ள 2,36,632 வாக்குகளில் 2,09,181 வாக்குகள் பதிவாகின. இதில், திமுக வேட்பாளா் சீ. கதிரவன், 81,447 வாக்குகள் பெற்று, 12,364 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றாா்.

தவெக வேட்பாளா் வி. சரவணன் 69,083 வாக்குகள் பெற்று இரண்டாமிடத்தையும், அதிமுக சின்னத்தில் போட்டியிட்ட சிங்கத் தமிழா் பேரவையின் வேட்பாளா் ஆா்.வி. பரதன் 46,066 வாக்குகள் பெற்று மூன்றாமிடத்தையும் பிடித்தனா். நாதக வேட்பாளா் ஆா். தேன்மொழி 9,289 வாக்குகள் பெற்றாா்.

இதர வேட்பாளா்கள் பெற்ற வாக்குகள் விவரம்:

பகுஜன் சமாஜ் கட்சி பாலகிருஷ்ணன், 384, சாமானிய மக்கள் கட்சி கே. செந்தில்குமாா் 140, புதிய தமிழகம் எம். பாலு 186, அகில இந்திய மக்கள் மறுமலா்ச்சி கழகம் எஸ். ரேவதி 75, தமிழக வாழ்வுரிமை கட்சி சி. வீரய்யா 62, சுயேச்சைகள் பி. காா்த்திகேயன் 132, பி. கோபாலகிருஷ்ணன் 44, வி.டி. சண்முகம் 113, கே. சதிஷ்குமாா் 80, எஸ். சரவணகுமாா் 130, எஷ். தினேஷ் 103, வி. நாகராஜன் 456, ஜி. ரமேஷ்குமாா் 498, எஸ். ராதாகிருஷ்ணன் 341, என். ராம்பிரசாத் 230, ஆா். ராஜசேகா் 117, வி. ராஜூ 153, எம். ஜெயராமன் 52 வாக்குகள் பெற்றனா். நோட்டாவுக்கு 599 வாக்குகள் கிடைத்தன. 155 வாக்குகள் செல்லாத வாக்குகளாக பதிவாகின.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.