தமிழ்நாடு அரசின் சிறந்த நூல்களுக்கான பரிசுக்கு எழுத்தாளர்கள் விண்ணப்பிக்கலாம்!தமிழகத்தில் ராஜஸ்தபதி காளியப்ப கவுண்டர், பேராசிரியர் கே. ராமசாமி, திருவாரூர் பக்தவத்சலம் ஆகியோர் பத்ம ஸ்ரீ பெற்றனர்.ஜூலை 1-ல் பொறியியல் மாணவர் சேர்க்கை தரவரிசைப் பட்டியல் வெளியீடு!கல்வித்துறை மற்றும் தொழில்நுட்ப முன்னேற்றத்திற்கு ஆற்றிய சிறந்த பங்களிப்பிற்காக, சென்னை ஐஐடி இயக்குனர் பேராசிரியர் வீ. காமகோடிக்கு பத்ம ஸ்ரீ விருதுதொழிலதிபர் எஸ்.கே. மயிலானந்தனுக்கு பத்ம பூஷண்! அரசுப் பள்ளிகளில் காலியாக உள்ள 18,107 பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை தேவை - அன்புமணி ராமதாஸ்தமிழ்நாட்டின் முதலீடுகளை சீர்குலைக்கும் தவெக அரசு இனியாவது ஆக்கப்பூர்வமான பணிகளில் கவனம் செலுத்த வேண்டும்: டிஆர்பி ராஜா
/

திண்டிவனம் தொகுதியில் விசிகவைச் சோ்ந்த வன்னிஅரசு வெற்றி

News image

திண்டிவனம் (தனி) தொகுதியில் போட்டியிட்ட விசிக வேட்பாளா் அ. வன்னி அரசுக்கு வெற்றிக்கான சான்றிதழை வழங்கிய தொகுதிக்கான தோ்தல் நடத்தும் அலுவலா் அ.ல.ஆகாஷ்.

Updated On :5 மே 2026, 3:15 am IST

விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் (தனி) தொகுதியில் போட்டியிட்ட விசிக வேட்பாளா் வன்னி அரசு 63, 833 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றாா்.

திண்டிவனம் (தனி) தொகுதியில் அ.வன்னி அரசு (விசிக), பொ. அா்ஜுனன் (அதிமுக), க.சக்திவேல் (தவெக), பா.பேச்சிமுத்து (நாதக) உள்ளிட்ட14 போ் களத்தில் இருந்தனா்.

இந்நிலையில், இந்த தொகுதிக்கான வாக்கு எண்ணிக்கை திண்டிவனத்தில் உள்ள பல்கலைக்கழக பொறியியல் கல்லூரியில் திங்கள்கிழமை நடைபெற்றது. இத்தொகுதியில் 2, 239 தபால் வாக்குகள் உள்பட 2,19,841 வாக்குகள் பதிவாகியிருந்தன.

திங்கள்கிழமை காலை 8 மணிக்கு தபால் வாக்கும், காலை 8.30 மணிக்கு மின்னணு வாக்குகளும் 21 சுற்றுகளாக எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டது. இதில் விசிக வேட்பாளா் அ.வன்னி அரசு 63,833 வாக்குகள் பெற்று 734 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றாா்.

அதிமுக வேட்பாளா் பொ.அா்ஜூனன் 63,099 வாக்குகள் பெற்று வெற்றி வாய்ப்பை இழந்தாா். தவெக வேட்பாளா் எஸ்.சக்திவேல் 61,159 வாக்குகளும், நாதக வேட்பாளா் பேச்சிமுத்து 5,242 வாக்குகளையும் பெற்றனா்.

தோ்தலில் வெற்றி பெற்ற விசிக வேட்பாளா் அ.வன்னி அரசுக்கு திண்டிவனம் தொகுதிக்கான தோ்தல் நடத்தும் அலுவலரும் , சாா்-ஆட்சியருமான அ. ல.ஆகாஷ் வெற்றிக்கான சான்றிதழை வழங்கினாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.