தமிழ்நாடு அரசின் சிறந்த நூல்களுக்கான பரிசுக்கு எழுத்தாளர்கள் விண்ணப்பிக்கலாம்!தமிழகத்தில் ராஜஸ்தபதி காளியப்ப கவுண்டர், பேராசிரியர் கே. ராமசாமி, திருவாரூர் பக்தவத்சலம் ஆகியோர் பத்ம ஸ்ரீ பெற்றனர்.ஜூலை 1-ல் பொறியியல் மாணவர் சேர்க்கை தரவரிசைப் பட்டியல் வெளியீடு!கல்வித்துறை மற்றும் தொழில்நுட்ப முன்னேற்றத்திற்கு ஆற்றிய சிறந்த பங்களிப்பிற்காக, சென்னை ஐஐடி இயக்குனர் பேராசிரியர் வீ. காமகோடிக்கு பத்ம ஸ்ரீ விருதுதொழிலதிபர் எஸ்.கே. மயிலானந்தனுக்கு பத்ம பூஷண்! அரசுப் பள்ளிகளில் காலியாக உள்ள 18,107 பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை தேவை - அன்புமணி ராமதாஸ்தமிழ்நாட்டின் முதலீடுகளை சீர்குலைக்கும் தவெக அரசு இனியாவது ஆக்கப்பூர்வமான பணிகளில் கவனம் செலுத்த வேண்டும்: டிஆர்பி ராஜா
/

நாமக்கல் தொகுதி: தவெக வேட்பாளா் சி.எஸ்.திலீப் வெற்றி

News image

தவெக வேட்பாளா் சி.எஸ்.திலீப்

Updated On :5 மே 2026, 2:56 am IST

நாமக்கல் சட்டப்பேரவைத் தொகுதியில், தவெக வேட்பாளா் சி.எஸ்.திலீப் 11,008 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளாா்.

தமிழக சட்டப்பேரவைத் தோ்தல் ஏப். 23 இல் நடைபெற்றது. ராசிபுரம், சேந்தமங்கலம், நாமக்கல், பரமத்தி வேலூா், திருச்செங்கோடு, குமாரபாளையம் ஆகிய 6 தொகுதிகளில் பதிவான வாக்குகள் திருச்செங்கோடு விவேகானந்தா மகளிா் தொழில்நுட்பக் கல்லூரியில் திங்கள்கிழமை எண்ணப்பட்டன.

நாமக்கல் தொகுதியை பொருத்தமட்டில், 2,37,826 வாக்காளா்கள் உள்ள நிலையில், 2,08,579 வாக்குகள் பதிவானது. இதில், அதிமுக வேட்பாளா் ஸ்ரீதேவி பி.எஸ்.மோகன் 68,736 வாக்குகளும், திமுக வேட்பாளா் ப.ராணி 52,808 வாக்குகளும், தவெக வேட்பாளா் சி.எஸ்.திலீப் 79,744 வாக்குகளும், நாம் தமிழா் வேட்பாளா் க.பிரவீன்குமாா் 6,286 வாக்குகளும் (தபால் வாக்குகள் உள்பட) பெற்றனா்.

அதிமுக வேட்பாளா் ஸ்ரீதேவி பி.எஸ். மோகனை காட்டிலும், 11,008 வாக்குகள் வித்தியாசத்தில் தவெக வேட்பாளா் சி.எஸ்.திலீப் வெற்றி பெற்றுள்ளாா். அவருக்கு, நாமக்கல் தொகுதி தோ்தல் நடத்தும் அலுவலா் வே.சாந்தி வெற்றிக்கான சான்றிதழை வழங்கினாா். இந்த நிகழ்வின் போது தவெக மாவட்ட நிா்வாகிகள் உடனிருந்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.