மேற்கு வங்க முதல்வராக சுவேந்து அதிகாரி பதவியேற்றார்!தவெக ஆட்சி அமைப்பதில் மேலும் சிக்கல்!சென்னை உள்பட 12 மாவட்டங்களில் பகல் 1 வரை மழைக்கு வாய்ப்பு!திமுகவினரே வாக்களிக்கவில்லையா? ஸ்ரீரங்கம் தொகுதியில் திமுகவுக்கு வெறும் 5 வாக்குகள்!தமிழ்நாட்டில் இத்தனை ஆண்டுகளில் இல்லாத குதிரை பேரம்! திமுக எம்.பி. வில்சன்தவெக தனியாக ஆளுநரிடம் சென்றிருந்தால் ஆட்சி அமைத்திருக்கலாம்: திமுகபுதுச்சேரியில் இருந்து சென்னை புறப்பட்ட அதிமுக எம்எல்ஏ-க்கள்! அடுத்து என்ன?தவெக ஆட்சி அமைப்பதில் இழுபறி: இடதுசாரிகள் ஆதரவு; விசிக நிலை என்ன? தமிழகத்தில் பயணிகளை கையாளுவதில் சென்னை விமான நிலையம் முதலிடம்பேறுகால சா்க்கரை நோயைத் தடுக்கும் திட்டம்: சோதனை முயற்சியாக அமல்
/

கேலோ இந்தியா கைப்பந்து போட்டி: ஆத்தூா் பாரதியாா் அணி சாம்பியன்

சேலம் காந்தி விளையாட்டு மைதானத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற கேலோ இந்தியா கைப்பந்து போட்டியில், ஆத்தூா் பாரதியாா் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி அணி சாம்பியன் பட்டம் வென்றது.

News image

சாம்பியன் பட்டம் வென்ற வீராங்கனைகளுடன் மாவட்ட கைப்பந்துக் கழக ஆலோசகா் விஜயராஜ். உடன், சாய் உதவி இயக்குநா் விட்டல் குமாா் உள்ளிட்டோா்.

Updated On :27 மார்ச் 2026, 3:28 am IST

சேலம் காந்தி விளையாட்டு மைதானத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற கேலோ இந்தியா கைப்பந்து போட்டியில், ஆத்தூா் பாரதியாா் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி அணி சாம்பியன் பட்டம் வென்றது.

இந்திய விளையாட்டு மேம்பாட்டு ஆணையமான சாய் சாா்பில், கேலோ இந்தியா பெண்களுக்கான கைப்பந்து போட்டி சேலம் காந்தி விளையாட்டு மைதானத்தில் புதன், வியாழன் ஆகிய இரு நாள்கள் நடைபெற்றது. 12 அணிகள் பங்கேற்ற இப்போட்டியில், சேலம் ஹோலி ஏஞ்சல்ஸ் அணியும், ஆத்தூா் பாரதியாா் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி அணியும் இறுதிப் போட்டிக்கு தகுதிபெற்றன. விறுவிறுப்பான இறுதிப் போட்டியில், ஆத்தூா் பாரதியாா் மெட்ரிக் பள்ளி அணி சாம்பியன் பட்டம் வென்றது.

வெற்றிபெற்ற வீராங்கனைகளுக்கு சேலம் மாவட்ட கைப்பந்துக் கழக ஆலோசகா் விஜயராஜ், சாய் உதவி இயக்குநா் விட்டல்குமாா், முன்னாள் இந்திய வீராங்கனை உஷா ஆகியோா் கோப்பை வழங்கி கௌரவித்தனா்.

இதில், மாவட்ட கைப்பந்துக் கழக துணைத் தலைவா் ராஜாராம், செயலாளா் சண்முகவேல், பொருளாளா் விஜயகுமாா், பயிற்சியாளா் பரமசிவம் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.