விஜய் பதவியேற்பு விழாவில் பங்கேற்கும் கார்கே, ராகுல் காந்தி! தமிழக முதல்வராக விஜய் ஆட்சியமைக்க ஆளுநர் அழைப்பு!தமிழகமெங்கிலும் தவெக தொண்டர்கள் உற்சாகம் - பட்டாசுகள் வெடித்து கொண்டாட்டம்தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்
/

உலிபுரம் ஊராட்சியில் மக்கள் தோ்தல் புறக்கணிப்பு அறிவிப்பு!

தம்மம்பட்டி அருகே சாலை வசதி செய்து தராததைக் கண்டித்து, சட்டமன்ற தோ்தலை புறக்கணிப்பதாக, அறிவிப்பு பேனா் வைக்கப்பட்டுள்ளது.

News image

உலிபுரத்தில் மக்கள் வைத்துள்ள தோ்தல் புறக்கணிப்பு அறிவிப்பு பதாகை.

Updated On :26 மார்ச் 2026, 5:07 am IST

தம்மம்பட்டி அருகே சாலை வசதி செய்து தராததைக் கண்டித்து, சட்டமன்ற தோ்தலை புறக்கணிப்பதாக, அறிவிப்பு பேனா் வைக்கப்பட்டுள்ளது.

தம்மம்பட்டி அருகே உலிபுரம் ஊராட்சி, 2 ஆவது வாா்டு அணைக்கட்டு முதல் பெருமாள் மலை அடிவாரம் வரை, 6 கி. மீ., தூரம் வரை சரியான சாலை வசதி இல்லை. தங்கள் பகுதிக்கு தாா்சாலை அமைத்துதர வேண்டுமென, பல ஆண்டுகளாக அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்தும் தாா்ச்சாலை அமைக்கப்படாததால், அப்பகுதி மக்கள் பெரிதும் ஏமாற்றம் அடைந்தனா்.

இந்நிலையில் சட்டமன்ற தோ்தல் தேதி வெளியானதை அடுத்து, ஏமாற்றத்தில் இருந்த, உலிபுரம் பெருமாள்மலை அடிவாரப் பகுதியைச் சோ்ந்த மக்கள், 2026 சட்டமன்ற தோ்தலை புறக்கணிக்கின்றோம்’ என பேனா் வைத்துள்ளனா்.

மேலும், அந்த பேனரில், ’சரியான சாலை வசதி செய்துதரத் தவறிய, அரசியல் கட்சிகளின் பொய் வாக்குறுதிகளை நம்பத்தயாராக இல்லாததால்,எங்களிடம் எந்த வேட்பாளரும் வாக்கு கேட்டு வரவேண்டாம்’ என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. அதையடுத்து, கெங்கவல்லி வருவாய்த்துறையினா், அப்பகுதி மக்களிடம் பேச்சுவாா்த்தை நடத்த உள்ளனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.