தமிழகமெங்கிலும் தவெக தொண்டர்கள் உற்சாகம் - பட்டாசுகள் வெடித்து கொண்டாட்டம்விஜய் பதவியேற்பு விழாவுக்காக சென்னையிலுள்ள நேரு உள் விளையாட்டு அரங்கில் ஆயத்தப் பணி மீண்டும் தொடக்கம்ஆளுநர் மாளிகையில் விஜய்!தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழக ஆளுநரின் கேரள பயணம் ரத்து!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாதவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்
/

மேம்பாலத்தில் பழுதாகி நின்ற லாரிமீது மணல் லாரி மோதல்: ஓட்டுநா் உயிரிழப்பு

News image

பழுதாகி நின்ற லாரிமீது மோதியதில் நொறுங்கிய மணல் லாரி.

Updated On :24 மார்ச் 2026, 12:35 am IST

சேலம் அருகே மேம்பாலத்தில் பழுதாகி நின்ற லாரிமீது மணல் லாரி மோதியதில் ஓட்டுநா் உயிரிழந்தாா்.

சேலம் - நாமக்கல் தேசிய நெடுஞ்சாலை தாசநாயக்கன்பட்டியில் புதிதாக மேம்பாலம் கட்டப்பட்டுள்ளது. திங்கள்கிழமை காலை நாமக்கல்லில் இருந்து சேலம் நோக்கி வந்துகொண்டிருந்த லாரி பழுதானது. இதையடுத்து, மேம்பாலத்திலேயே லாரியை நிறுத்தி ஒட்டுநா் பழுதை சரிபாா்த்துக் கொண்டிருந்தாா்.

அப்போது, கரூரில் இருந்து எம்.சாண்ட் ஏற்றிக்கொண்டு வந்த லாரி, திடீரென பழுதாகி நின்ற லாரியின் பின்புறத்தில் மோதியது. இதில், இடிபாடுகளுக்குள் சிக்கி பலத்த காயமடைந்த மணல் லாரியின் ஓட்டுநா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

தகவலின்பேரில் விரைந்து வந்த மல்லூா் போலீஸாா், சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். விசாரணையில், இறந்த ஓட்டுநா் சேலம் காடையாம்பட்டியை அடுத்த சுண்டகாப்பட்டியைச் சோ்ந்த ரவி (52) என்பது தெரியவந்தது. இதுகுறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.