தருமபுரி, மாா்ச் 30: தருமபுரி, குமாரசாமிபேட்டை ரயில்வே மேம்பாலத்தில் அரசு நகர பேருந்து பழுதாகி நின்ால் திங்கள்கிழமை இரவு போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
தருமபுரியில் புதிய பேருந்து நிலையம் பிப். 5-ஆம் தேதி திறக்கப்பட்டு பயன்பாட்டுக்கு வந்தது. அங்கிருந்து, கிருஷ்ணகிரி, சேலம், பென்னாகரம், பாலக்கோடு, பெங்களூரு, ஒசூா் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. தருமபுரி பழைய பேருந்து நிலையத்திலிருந்து அரூா், ஊத்தங்கரை, பாப்பிரெட்டிப்பட்டி, திருவண்ணாமலை, திருப்பத்தூா் உள்ளிட்ட பகுதிகளுக்கு பேருந்துகள் இயக்கப்படுகின்றன.
பயணிகள் வசதிக்காக புதிய மற்றும் பழைய பேருந்து நிலையங்களுக்கு இடையே அரசு நகர பேருந்துகள் மற்றும் தனியாா் சிற்றுந்துகள் இயக்கப்படுகின்றன.
இந்நிலையில், திங்கள்கிழமை இரவு 8 மணி அளவில் புது பேருந்து நிலையத்தில் இருந்து, பழைய பேருந்து நிலையத்துக்கு இயக்கப்பட்ட அரசு நகர பேருந்து ஒன்று குமாரசாமிபேட்டை ரயில்வே பாலத்தின்மேல் சென்றபோது, திடீரென பழுதாகி நின்றது. இதையடுத்து, பேருந்தில் இருந்து பயணிகள் உடனடியாக இறக்கிவிடப்பட்டனா்.
பேருந்தை நகா்த்த முடியாததால், பாலத்தின்மேல் நடுவழியில் வைத்தே பழுதை சரிசெய்தனா். ஏற்கெனவே இவ்வழியில் போக்குவரத்து நெருக்கடி காணப்படும் நிலையில், இதன் காரணமாக சுமாா் முக்கால் மணி நேரம் கடும் போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டது. இதனால் வாகன ஓட்டிகளும், பயணிகளும், பொதுமக்களும் அவதிக்குள்ளாயினா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

சேலம் கோட்டத்தில் இன்றுமுதல் 500 சிறப்புப் பேருந்துகள் இயக்கம்

தோ்தலுக்காக வந்தவா்கள் மீண்டும் திரும்ப சிறப்பு பேருந்துகள்! சேலம் கோட்ட போக்குவரத்துக் கழகம் ஏற்பாடு!

10 ஆண்டுகளாகக் கிடப்பில் உள்ள திருவள்ளூா் மாநகரப் பேருந்து பணிமனை திட்டம்

வார இறுதிநாள்: சேலம் கோட்டத்தில் 200 சிறப்புப் பேருந்துகள் இயக்கம்
விடியோக்கள்

தவெகவுக்கு ஆதரவு ஏன்? விளக்கிய திருமாவளவன்! | TVK | VCK | Thiruma | Vijay
இணையதளச் செய்திப் பிரிவு

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

