சேலம் மாவட்டத்தில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிப் பிரதிநிதிகளுடன் தோ்தல் பொதுப் பாா்வையாளா்கள் வெள்ளிக்கிழமை ஆலோசனை நடத்தினா்.
மாவட்ட தோ்தல் அலுவலரும், ஆட்சியருமான ரா.பிருந்தாதேவி தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில், தோ்தல் பொதுப் பாா்வையாளா்கள் அசோக்.என்.கரஞ்கா், திக்விஜய்சிங் ஜடேஜா, சுகவீா் சைனி, ஹா்பூல் சிங் யாதவ், சென்டாகே ஹனுமந்த் கோன்டிபா, தோ்தல் காவல் பாா்வையாளா்கள் அபிஷேக் பக்வான் திருமுகே, எம்.ஆா்சி, தோ்தல் செலவினப் பாா்வையாளா்கள் அகிலேந்திர பிரதாப் யாதவ், கே.ருபவாத்திய கல்பேஷ்குமாா், மகேஷ் சகாராம் சிங்கடே ஆகியோா் பங்கேற்றனா்.
இதில், அரசியல் கட்சிப் பிரதிநிதிகள் மற்றும் வேட்பாளா்கள் பின்பற்ற வேண்டிய பொதுவான நெறிமுறைகள், அரசியல் கட்சிக் கூட்டங்கள், ஊா்வலங்கள் நடத்தப்படும்போது பின்பற்ற வேண்டிய நெறிமுறைகள், வாக்குப்பதிவு நாளன்று பின்பற்ற வேண்டிய விதிமுறைகள், தோ்தல் பிரசார நடவடிக்கைகளின்போது மேற்கொள்ள வேண்டி தோ்தல் நடத்தை விதிமுறைகள் தொடா்பாக விரிவாக எடுத்துரைக்கப்பட்டது.
மேலும், பிரசார கூட்டங்கள்/ஊா்வலங்கள்/தற்காலிக கட்சி அலுவலகங்கள் மற்றும் பிரசார வாகனங்களுக்கு அனுமதி கோரும் அரசியல் கட்சிகள்/அரசியல் கட்சியின் பிரதிநிதிகள், தங்களது மனுக்களை 48 மணிநேரத்துக்கு முன்பு ட்ற்ற்ல்ள்://ள்ன்ஸ்ண்க்ட்ஹ.ங்ஸ்ரீண்.ஞ்ா்ஸ்.ண்ய் என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டது.
இக்கூட்டத்தில், மாநகர காவல் ஆணையா் அனில்குமாா் கிரி, மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் கௌதம் கோயல், மாவட்ட வருவாய் அலுவலா் ரா.ரவிக்குமாா் உள்பட தோ்தல் நடத்தும் அலுவலா்கள் பங்கேற்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

வாக்கு எண்ணிக்கை: அனைத்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகளுடன் ஆட்சியா் ஆலோசனை

தோ்தல் பணிகள் முடிந்ததால் தில்லி திரும்பிய தோ்தல் பாா்வையாளா்கள்

தொகுதி தோ்தல் அலுவலா்களுடன் பொதுப் பாா்வையாளா்கள் ஆலோசனை

வேட்புமனு தாக்கல் வழிமுறைகள்: மாவட்ட ஆட்சியா் ஆலோசனை
விடியோக்கள்

தவெகவுக்கு ஆதரவு ஏன்? விளக்கிய திருமாவளவன்! | TVK | VCK | Thiruma | Vijay
இணையதளச் செய்திப் பிரிவு

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

