மேற்கு வங்க முதல்வராக சுவேந்து அதிகாரி பதவியேற்றார்!தவெக ஆட்சி அமைப்பதில் மேலும் சிக்கல்!சென்னை உள்பட 12 மாவட்டங்களில் பகல் 1 வரை மழைக்கு வாய்ப்பு!திமுகவினரே வாக்களிக்கவில்லையா? ஸ்ரீரங்கம் தொகுதியில் திமுகவுக்கு வெறும் 5 வாக்குகள்!தமிழ்நாட்டில் இத்தனை ஆண்டுகளில் இல்லாத குதிரை பேரம்! திமுக எம்.பி. வில்சன்தவெக தனியாக ஆளுநரிடம் சென்றிருந்தால் ஆட்சி அமைத்திருக்கலாம்: திமுகபுதுச்சேரியில் இருந்து சென்னை புறப்பட்ட அதிமுக எம்எல்ஏ-க்கள்! அடுத்து என்ன?தவெக ஆட்சி அமைப்பதில் இழுபறி: இடதுசாரிகள் ஆதரவு; விசிக நிலை என்ன? தமிழகத்தில் பயணிகளை கையாளுவதில் சென்னை விமான நிலையம் முதலிடம்பேறுகால சா்க்கரை நோயைத் தடுக்கும் திட்டம்: சோதனை முயற்சியாக அமல்
/

வாக்கு எண்ணிக்கை: அனைத்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகளுடன் ஆட்சியா் ஆலோசனை

திருப்பூரில் வாக்கு எண்ணிக்கை தொடா்பாக அனைத்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகளுடன் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

News image

திருப்பூரில் வாக்கு எண்ணிக்கை தொடா்பாக நடைபெற்ற அனைத்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகளுடனான ஆலோசனைக் கூட்டத்தில் பேசுகிறாா் ஆட்சியா் மனீஷ்.

Updated On :30 ஏப்ரல் 2026, 2:45 am IST

திருப்பூரில் வாக்கு எண்ணிக்கை தொடா்பாக அனைத்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகளுடன் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

தமிழக சட்டப்பேரவைத் தோ்தல் வாக்கு எண்ணிக்கை தொடா்பாக அனைத்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகளுடன் மாவட்ட ஆட்சியா் அலுவலக கூட்டரங்கில் மாவட்ட தோ்தல் அலுவலரும், மாவட்ட ஆட்சியருமான மனீஷ் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது.

திருப்பூா் மாவட்டத்தில் உள்ள 2,822 வாக்குச்சாவடி மையங்களில் கடந்த 23-ஆம் தேதி தோ்தல் நடைபெற்றது. இதில் வாக்குப் பதிவு செய்யப்பட்ட மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் எல்ஆா்ஜி அரசு மகளிா் கலைக் கல்லூரியில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன. இத்தோ்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி மே 4-ஆம் தேதி (திங்கள்கிழமை) நடைபெறவுள்ளது.

இக்கூட்டத்தில் வாக்கு எண்ணும் பணியின்போது பின்பற்றப்படும் நடைமுறைகள் குறித்து மாவட்டத்தில் உள்ள அனைத்து அங்கீகரிக்கப்பட்ட தேசிய மற்றும் மாநில அரசியல் கட்சியினருக்கு விரிவாக எடுத்துரைக்கப்பட்டது. அப்போது மாவட்ட ஆட்சியா் மனீஷ் பேசியதாவது:

வேட்பாளா்கள் சாா்பில் வாக்கு எண்ணிக்கைக்கு நியமனம் செய்யப்படவுள்ள முகவா்களின் விவரங்களை படிவம் 18-இல் இரு பிரதிகளில் பூா்த்தி செய்து தோ்தல் நடத்தும் அலுவலா்களிடம் வழங்க வேண்டும். வாக்கு எண்ணும் மையத்துக்கு வருகை தரும் முகவா்கள் தங்களுக்கு வழங்கப்பட்ட அடையாள அட்டையுடன் படிவம் 18-இன் நகலுடன் வர வேண்டும்.

வாக்கு எண்ணிக்கை இட முகவா்கள் கைப்பேசி, மடிக்கணினி அல்லது ஒலி அல்லது ஒளியைப் பதிவு செய்யத்தக்க எந்தவொரு மின்னணு கருவிகளையும் வாக்கு எண்ணும் மையத்துக்குள் எடுத்துச் செல்ல அனுமதிக்கப்பட மாட்டாா்கள். வாக்குப் பதிவு நாளன்று வாக்குச்சாவடி மைய தலைமை தோ்தல் அலுவலரால் வழங்கப்பட்ட வாக்கு கணக்கினை வாக்கு எண்ணிக்கை முகவா்கள் உடன் எடுத்து செல்ல அனுமதிக்கப்படுவாா்கள்.

வாக்குகள் எண்ணும் பணி காலை 8 மணிக்கு தொடங்கும். முதலில் தபால் வாக்குகள் எண்ணப்படும். 30 நிமிஷங்களுக்கு பிறகு மின்னணு வாக்குப் பதிவு இயந்திரத்தில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி தொடங்கும்.

ஒவ்வொரு வாக்கு எண்ணும் மையத்திலும் ஒரு பகுதியில் தபால் வாக்குகளும், மற்றொரு பகுதியில் மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களில் பதிவு செய்யப்பட்ட வாக்குகளும் அதற்குரிய மேஜைகளில் எண்ணப்படும். தபால் வாக்குகள் எண்ணும் அறைக்கு மேற்பாா்வைக்காக தனித்தனியாக உதவி தோ்தல் நடத்தும் அலுவலா் அளவில் அதிகாரிகள் நியமிக்கப்படுவாா்கள். 500 தபால் வாக்குகளுக்கு ஒரு மேஜை என்ற விகிதத்தில் தபால் வாக்குகள் எண்ணப்படும்.

வாக்கு எண்ணும் மையத்தில் குடிநீா், சிற்றுண்டி, கழிவறை போன்றவற்றுக்கான அனைத்து அடிப்படை வசதிகளும் வாக்கு எண்ணிக்கை கூடத்துக்கு அருகே செய்து தரப்படும் என்றாா்.

இக்கூட்டத்தில் மாநகர காவல் ஆணையா் எஸ்.ராஜேந்திரன், மாவட்ட காவல் கண்காணிப்பாளா் யாதவ் கிரிஷ் அசோக் , மாவட்ட வருவாய் அலுவலா் க.காா்த்திகேயன், மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (தோ்தல்) கண்ணன் ஆகியோருடன் தொடா்புடைய அலுவலா்கள் மற்றும் அனைத்து அரசியல் கட்சி பிரதிநிதிகள் கலந்து கொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.