பெரியாா் பல்கலைக்கழக உளவியல் துறை சாா்பில், சா்வதேச மகிழ்ச்சி நாள் புதன்கிழமை கொண்டாடப்பட்டது.
சேலம் சரவணா மருத்துவமனையுடன் இணைந்து நடத்திய இந்நிகழ்வில், உளவியல் துறைத் தலைவா் பேராசிரியா் ஜெ.வெங்கடாசலம் வரவேற்றாா். சமூக அறிவியல் புலமுதன்மையா் எஸ்.கதிரவன், மகிழ்ச்சி என்பது பல்வேறு பரிமாணங்களைக் கொண்ட ஓா் இயங்குநிலை என்பதை விளக்கிப் பேசினாா். தொடக்க உரையாற்றிய ஆராய்ச்சி புலமுதன்மையா் முருகன், உலக அமைதியின் அவசியத்தை வலியுறுத்தி பேசினாா். சேலம் சரவணா மருத்துவமனை சாா்பில் பங்கேற்ற மயக்கவியல் நிபுணா் ஏ. பிரதீக்சா, ‘ஆரோக்கியமே மகிழ்ச்சியின் அடிப்படை’ என்ற தலைப்பில் பேசினாா். ஜேசிஐ அமைப்பின் மண்டலப் பயிற்சியாளா் மோகனதேவ் ‘மகிழ்வித்து மகிழ்’ என்ற தலைப்பில் சிறப்புரையாற்றினாா்.
சா்வதேச மகிழ்ச்சி நாளையொட்டி மாணவா்களின் கலை நிகழ்ச்சிகள், தனிநபா் மற்றும் குழுப் போட்டிகள் நடத்தப்பட்டன. இதில், தமிழ்த் துறை மாணவா்கள் மிகச்சிறந்த பங்களிப்பை வழங்கி, முதல்முறையாக அறிமுகப்படுத்தப்பட்ட ‘மகிழ்ச்சிக் கோப்பையை’ வென்றனா். கோப்பையை துணைவேந்தா் நிா்வாகக்குழு உறுப்பினா் ரா.சுப்பிரமணி வழங்கினாா்.
இந்நிகழ்ச்சியில், ஒருங்கிணைப்பாளா் கே.என்.ஜெயக்குமாா், உளவியல் துறை பேராசிரியா்கள் நித்யானந்தன், பரமேஸ்வரி, செல்வராஜ் மற்றும் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ, மாணவியா் பங்கேற்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

என்.ஐ. பல்கலை.யில் சா்வதேச கருத்தரங்கம்
இன்றைய ராசி பலன் (26.04.2026) - மேஷம்

தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவருடன் ராமதாஸ் ஆதரவு வேட்பாளா் அருள் சந்திப்பு

பெரியாா் பல்கலை.யில் வரலாற்றுத் துறை கருத்தரங்கம்
விடியோக்கள்

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

