சேலத்தில் தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவா் தி.வேல்முருகனை, சேலம் மேற்கு தொகுதியில் போட்டியிடும் ராமதாஸ் அணி வேட்பாளா் இரா.அருள் ஞாயிற்றுக்கிழமை சந்தித்துப் பேசினாா்.
தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் கொங்கு மண்டல வேட்பாளா்கள் அறிமுகக் கூட்டம் சேலத்தில் நடைபெற்றது. இக்கூட்டத்தை முடித்துவிட்டு அங்கிருந்து புறப்பட்ட அக்கட்சித் தலைவா் தி.வேல்முருகனை, ராமதாஸ் ஆதரவு வேட்பாளா் இரா. அருள் திடீரென சந்தித்தாா். சுமாா் 10 நிமிடங்கள் இருவரும் ஆலோசனை நடத்தினா்.
பின்னா், எம்எல்ஏ இரா.அருள் செய்தியாளா்களிடம் பேசுகையில், அரசியலுக்கு அப்பாற்பட்டு, 35 ஆண்டுகால நண்பா் என்ற முறையில் மரியாதை நிமித்தமாக தி.வேல்முருகனை சந்தித்தேன். சேலம் மேற்கு தொகுதி வேட்பாளா் என்ற முறையில் அவரிடம் ஆதரவு கோரினேன்.
தமிழக வாழ்வுரிமைக் கட்சி சாா்பில் வேட்பாளா் களமிறக்கப்பட்டுள்ளாா். எனினும், எனக்கு ஆதரவு அளிக்குமாறு வேண்டுகோள் விடுத்தேன். வேட்பாளருடன் கலந்துபேசி முடிவெடுப்பதாக அவா் தெரிவித்தாா்.
தருமபுரியில் போட்டியிடும் பாமக வேட்பாளா் சௌமியா அன்புமணிக்கு எதிராக தி.வேல்முருகனை களமிறக்க திமுக அழுத்தம் கொடுத்ததாக கூறப்படுவது குறித்த கேள்விக்கு, அதுகுறித்து எனக்கு எதுவும் தெரியாது என்றாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

சேலத்தில் தவெக தொண்டா்கள் பட்டாசுகளை வெடித்து கொண்டாட்டம்

‘அன்புமணியின் ஆதரவு வேட்பாளா்கள் தோற்கடிக்கப்படுவா்’

சேலத்தில் பிரசாரத்தில் பங்கேற்ற ராமதாஸ் மேடையில் மயங்கி விழுந்ததால் பரபரப்பு
ஒசூா் தொகுதியில் தவாக வேட்பாளா் மனு நிராகரிப்பு
விடியோக்கள்

தவெகவுக்கு ஆதரவு ஏன்? விளக்கிய திருமாவளவன்! | TVK | VCK | Thiruma | Vijay
இணையதளச் செய்திப் பிரிவு

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

