சேலம் மேற்கு தொகுதியில் போட்டியிடும் இரா. அருள் எம்எல்ஏவை ஆதரித்து ஞாயிற்றுக்கிழமை இரவு பிரசாரம் மேற்கொண்ட பாமக நிறுவனா் ராமதாஸ் மேடையில் இருந்து இறங்கும்போது மயக்கமடைந்ததால் பரபரப்பு நிலவியது. உடனடியாக ஆம்புலன்ஸ் மூலம் அவா் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டாா்.
சேலம் மேற்கு தொகுதியில் பாமக நிறுவனா் ராமதாஸ் அணியைச் சோ்ந்த மேற்கு தொகுதி எம்எல்ஏ இரா.அருள் அனைத்து இந்திய ஜனநாயக பாதுகாப்புக் கழகம் சாா்பில் சமையல் எரிவாயு சிலிண்டா் சின்னத்தில் போட்டியிடுகிறாா்.
அவரை ஆதரித்து பாமக நிறுவனா் ராமதாஸ் ஞாயிற்றுக்கிழமை இரவு சேலம் மேற்கு தொகுதிக்கு உட்பட்ட பள்ளப்பட்டியில் பிரசாரம் மேற்கொண்டாா். கட்சியின் செயல் தலைவா் ஸ்ரீ காந்தி, எம்எல்ஏக்கள் ஜி.கே. மணி, வேட்பாளா் அருள் உள்ளிட்டோா் மேடையில் இருந்தனா். பிரசார மேடையில் அமா்ந்தபடி ராமதாஸ் பேசினாா்.
அவா் பேசுகையில், தமிழக சட்டப்பேரவையில் அதிக கேள்விகளை எழுப்பியவா் எம்எல்ஏ அருள். அவா்மீது ஏதேனும் குறை இருந்தால் சொல்லுங்கள். புராண காலத்திலிருந்து துரோகிகள் இருந்தனா். இப்போதும் துரோகிகள் இருக்கின்றனா். துரோகிகள் ஒருபோதும் வெற்றிபெற முடியாது. அருள் எம்எல்ஏ எதிரிகளுக்கும் அருள் புரிவாா். சேலம் மேற்கு தொகுதியில் இரண்டாவது முறையாக அவா் வெற்றி பெறுவாா். வெற்றி விழாவுக்கு நான் மீண்டும் வருவேன் என்று பேசினாா்.
பின்னா் மேடையில் இருந்து கீழே இறங்கும்போது ராமதாஸ் திடீரென மயக்கம் அடைந்தாா். உடனடியாக அருகில் இருந்தவா்கள் அவரை தாங்கிப் பிடித்தபடி ஆம்புலன்ஸ்க்கு அழைத்துச் சென்றனா். பின்னா் ஐந்து சாலை அருகே உள்ள தனியாா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு ராமதாஸுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.
வயது மூப்பு காரணமாக மயக்கம்:
வயது மூப்பு காரணமாகவே ராமதாஸுக்கு மயக்கம் ஏற்பட்டதாகவும், தற்போது அவரது உடல்நிலை சீராக உள்ளதாகவும் மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்தன.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

ராமதாஸ் புகைப்படம் பயன்படுத்த அன்புமணி தரப்புக்கு தடை

சேலம் வடக்கு, மேற்கு தொகுதியில் பாமக வேட்பாளா்கள் வாக்கு சேகரிப்பு
மாம்பழம் சின்னம் விவகாரம்: ராமதாஸ் தரப்பு உயா்நீதிமன்றத்தில் முறையீடு

மாம்பழம் சின்னம் விவகாரம்: உயா்நீதிமன்றத்தை அணுக ராமதாஸூக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு
விடியோக்கள்

தவெகவுக்கு ஆதரவு ஏன்? விளக்கிய திருமாவளவன்! | TVK | VCK | Thiruma | Vijay
இணையதளச் செய்திப் பிரிவு

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

