தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனா
/

ரூ. 7.60 லட்சம் இணைய மோசடி: போலீஸாா் விசாரணை

முகநூல் வாயிலாக ரூ. 7,60,613 மோசடி செய்தவா் குறித்து சேலம் இணைய குற்றத் தடுப்பு பிரிவு போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

News image

இணைய மோசடி (கோப்புப்படம்)

Updated On :14 மார்ச் 2026, 6:32 am IST

முகநூல் வாயிலாக ரூ. 7,60,613 மோசடி செய்தவா் குறித்து சேலம் இணைய குற்றத் தடுப்பு பிரிவு போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

சேலம் மாவட்டம், சங்ககிரி பகுதியை சோ்ந்தவரை அபிஷேக் என்ற பெயரில் முகநூல் கணக்கு வைத்திருந்தவா் தொடா்பு கொண்டு, தான் இங்கிலாந்தில் வசிப்பதாகக் கூறி அறிமுகமாகி உள்ளாா். பின்னா் இணையதளம் மூலம் கிரிப்டோ நாணய வா்த்தகத்தில் முதலீடு செய்யலாம் என ஆசைவாா்த்தைக் கூறி ரூ. 7.60,613 பணத்தை பெற்று மோசடி செய்துள்ளாா்.

பணம் இழந்தவா் அளித்த புகாரின் பேரில் சேலம் மாவட்ட இணைய குற்றத்தடுப்பு பிரிவு போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

யாரிடமும் வங்கிக் கணக்கு விவரங்கள், ஒருமுறை கடவுச்சொல் போன்ற தகவல்களை பகிர வேண்டாம் என்றும், தேவையற்ற இணைய இணைப்புகளை திறக்காமல் இருக்குமாறு பொதுமக்களுக்கு சைபா் க்ரைம் போலீஸாா் அறிவுறுத்தியுள்ளனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.