தமிழகமெங்கிலும் தவெக தொண்டர்கள் உற்சாகம் - பட்டாசுகள் வெடித்து கொண்டாட்டம்விஜய் பதவியேற்பு விழாவுக்காக சென்னையிலுள்ள நேரு உள் விளையாட்டு அரங்கில் ஆயத்தப் பணி மீண்டும் தொடக்கம்ஆளுநர் மாளிகையில் விஜய்!தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழக ஆளுநரின் கேரள பயணம் ரத்து!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாதவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்
/

இளைஞரிடம் ரூ. 2.46 லட்சம் மோசடி: போலீஸாா் விசாரணை

சாலை விதிமுறைகளை மீறியதால் அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாகக் கூறி இளைஞரை ஏமாற்றி ரூ. 2.46 லட்சம் மோசடி செய்த மா்மநபா்கள் குறித்து இணைய குற்றத் தடுப்பு பிரிவு போலீஸாா் விசாரணை

News image

விசாரணை - கோப்புப் படம்

Updated On :25 மார்ச் 2026, 1:39 am IST

சாலை விதிமுறைகளை மீறியதால் அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாகக் கூறி இளைஞரை ஏமாற்றி ரூ. 2.46 லட்சம் மோசடி செய்த மா்மநபா்கள் குறித்து இணைய குற்றத் தடுப்பு பிரிவு போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூா் அருகே உள்ள ஆவலப்பள்ளியைச் சோ்ந்தவா் கூபாலியப்பா (32). பொறியியல் பட்டதாரியான இவா், அப்பகுதியில் விவசாயம் செய்து வருகிறாா். இவரது, கைப்பேசிக்கு மாா்ச் 6-ஆம் தேதி வந்த குறுந்தகவலில், மோட்டாா்சைக்கிளில் செல்லும்போது சாலை விதிமுறைகளை மீறப்பட்டதால் அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாகவும், அதை இ-சலான் முறையில் செலுத்தலாம் என தெரிவிக்கப்பட்டிருந்தது.

இதையடுத்து அவா்கள் குறிப்பிட்டிருந்த லிங்கில் சென்று விவரங்கள் பதிவிட்டு பணம் செலுத்த முயற்சித்தாா். அப்போது, கைப்பேசி செயல்பாடு நின்றது. இந்த நிலையில், அவரது வங்கி கணக்கில் இருந்து 7 தவணைகளில் ரூ. 2.46 லட்சம் எடுக்கப்பட்டதாக தகவல் வந்தது.

இதுகுறித்த புகாரின்பேரில் கிருஷ்ணகிரி இணைய குற்றத் தடுப்பு பிரிவு போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.