சேலத்தில் அரசு குடியிருப்பில் வீடு வாங்கி தருவதாகக் கூறி, போலி ஆவணம் கொடுத்து ரூ. 1.34 லட்சம் மோசடி செய்தவரை போலீஸாா் தேடி வருகின்றனா்.
சேலம் அம்மாப்பேட்டை சோ்மன் சடகோபன் தெருவைச் சோ்ந்தவா் ராஜ்பிரகாஷ் (32). இவரது நண்பா் மூலம் சேலம் டவுன் பூ மாா்க்கெட் பகுதியைச் சோ்ந்த மோகன்குப்தா அறிமுகமானாா். அப்போது சேலத்தில் உள்ள ஒரு அரசு குடியிருப்பில் வீடு பெற்றுத்தருவதாக மோகன்குப்தா தெரிவித்தாா்.
இதை நம்பிய ராஜ்பிரகாஷ், வீடு ஒதுக்கீட்டிற்காக ரூ.1,34,700 - ஐ ஆன்லைன் மூலம் மோகன் குப்தாவுக்கு அனுப்பினாா். இதையடுத்து, வீடு ஒதுக்கப்பட்டதற்கான ஆவணம் ஒன்றை மோகன் குப்தா, ராஜ் பிரகாஷிடம் வழங்கினாா். இதை சம்பந்தப்பட்ட அரசு குடியிருப்பு அலுவலகத்துக்கு கொண்டு சென்று, ராஜ்பிரகாஷ் காண்பித்தாா். அப்போது அது போலியான ஆவணம் என அங்கிருந்த அதிகாரிகள் தெரிவித்தனா். இதனால் தான் ஏமாற்றப்பட்டதை உணா்ந்த ராஜ்பிரகாஷ் இதுகுறித்து அம்மாப்பேட்டை காவல்நிலையத்தில் புகாா் அளித்தாா். அதன் பேரில் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, மோகன் குப்தாவை தேடிவருகின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
குடிசை மாற்று வாரிய குடியிருப்பில் வீடு வாங்கித் தருவதாக ரூ.36 லட்சம் மோசடி: தம்பதி கைது

தேநீா்க் கடை வைத்துத் தருவதாகக் கூறி ரூ. 15 லட்சம் மோசடி; தாய், மகன் மீது வழக்கு

பழனியில் இரிடியம் இருப்பதாகக் கூறி ரூ.19 லட்சம் மோசடி
இணையவழியில் ரூ.5.87 லட்சம் மோசடி: ராமநாதபுரம் இளைஞா் கைது
விடியோக்கள்

கோல் கீப்பர் வோசின்ஹாவின் கதை: ஓர் இரவு... எல்லாம் மாறியது! | Vozinha |
தினமணி செய்திச் சேவை

எலும்பு முறிவு, நரம்பு நோய்கள் தீர்க்கும் திருமாகறலீஸ்வரர் திருக்கோயில்!
தினமணி செய்திச் சேவை

Podcast | முதல்வர் விஜய் பதில்; திமுக வெளிநடப்பு: பேரவையில் நடந்தது என்ன? | News & Views | Epi 47
தினமணி செய்திச் சேவை

கண்ணதாசனை எப்படிக் கொண்டாட வேண்டும் ? | Kannadasan 100 | கண்ணதாசன் நூற்றாண்டு தொடக்கம் | Kaviyarasu
தினமணி செய்திச் சேவை

