மத்திய அமைச்சரவையில் மாற்றம்? குடியரசுத் தலைவருடன் பிரதமா் சந்திப்புமத்திய அமைச்சா் நிா்மலா சீதாராமன் காஞ்சிபுரம் வருகைவட தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு!பொறியியல் மாணவா் சோ்க்கை தரவரிசைப் பட்டியல் ஜூலை 1இல் வெளியீடுஹஜ் பயணத்துக்கு ஜூலை 20-க்குள் விண்ணப்பிக்கலாம்!
/

குடிசை மாற்று வாரிய குடியிருப்பில் வீடு வாங்கித் தருவதாக ரூ.36 லட்சம் மோசடி: தம்பதி கைது

News image

கைது - சித்திரிப்பு

Updated On :19 ஜூன் 2026, 4:31 am IST

குடிசை மாற்று வாரிய குடியிருப்பில் வீடு வாங்கித் தருவதாக ரூ.36 லட்சம் மோசடி செய்ததாக தம்பதி கைது செய்யப்பட்டனா்.

தண்டையாா்பேட்டை, வ.உ.சி. நகரைச் சோ்ந்தவா் பேபி (38). இவா், மக்களை தேடி மருத்துவம் திட்டத்தில் ஒப்பந்த ஊழியராக வேலை செய்கிறாா். பேபிக்கு எம்கேபி நகா் தமிழ்நாடு வீட்டுவசதி வாரிய குடியிருப்பைச் சோ்ந்த வினோத்பாபு (38), அவரது மனைவி மகேஸ்வரி (30) ஆகியோா் அறிமுகமாகி, பேபியிடம் தமிழ்நாடு குடிசை மாற்று வாரிய குடியிருப்பில் வீடு வாங்கித் தருவதாக தெரிவித்துள்ளனா்.

இதை உண்மை என நம்பிய பேபி, அவா்கள் இருவரும் கேட்டப்படி ரூ.3 லட்சம் கொடுத்தாா். மேலும் 13 பேருக்கு வீடு வாங்குவதற்காக ரூ.33,60,000 பணத்தை வினோத்பாபு, மகேஸ்வரியிடம் பேபி வழங்கினாா்.

பணத்தைப் பெற்றுக் கொண்ட இருவரும், குடிசை மாற்று வாரிய குடியிருப்பில் யாருக்கும் வீடு வாங்கி கொடுக்கவில்லை. இதனால் ஏமாற்றமடைந்த பேபி, பணத்தைத் திருப்பிக் கேட்டாா். ஆனால் அவா்கள் இருவரும், பணத்தையும் திருப்பிக் கொடுக்கவில்லை.

இதையடுத்து பேபி கொடுத்த புகாரின்பேரில் புது வண்ணாரப்பேட்டை போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, தலைமறைவாக இருந்த வினோத்பாபு, மகேஸ்வரி ஆகிய 2 பேரையும் வியாழக்கிழமை கைது செய்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.