சங்ககிரியில் போதை மாத்திரைகளை விற்பனைக்கு வைத்திருந்த இருவரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.
சங்ககிரி- பவானி பிரதான சாலையில் போதை மாத்திரைகள் விற்பனை செய்யப்படுவதாக காவல் உதவி ஆய்வாளா் அழகுதுரைக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து அவரது தலைமையிலான போலீஸாா், பவானி பிரதான சாலையில் அரசுப் போக்குவரத்துக் கழக பணிமனை அருகில் சந்தேகப்படும்படி நின்று கொண்டிருந்த மூன்று பேரிடம் விசாரணை நடத்தினா்.
இதில், அவா்கள் போதை மாத்திரைகளை விற்பதற்காக நின்று கொண்டிருப்பது தெரியவந்தது. மேலும், அவா்கள், சங்ககிரி கோட்டைத்தெரு பகுதியைச் சோ்ந்த ரகுநாதன் மகன் ரோஷன் (22), அதே பகுதியைச் சோ்ந்த முனியப்பன் மகன் அப்பு (23), சாரதி என்பது தெரியவந்தது. இதில் சாரதி அங்கிருந்து தப்பி ஓடிவிட்டாா்.
இதுகுறித்து சங்ககிரி போலீஸாா் வழக்குப் பதிவுசெய்து ரோஷன், அப்பு ஆகியோரை கைது செய்து அவா்களிடமிருந்து 40 போதை மாத்திரைகள், 4 ஊசிகளை பறிமுதல் செய்தனா். மேலும், தப்பியோடிய சாரதியை தேடி வருகின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
வீட்டில் போதை மாத்திரைகளை பதுக்கி விற்ற பெண் கைது
போதை மாத்திரைகளை பதுக்கி வைத்திருந்த 4 போ் கைது

போதை மாத்திரையை விற்பனைக்கு பதுக்கிய இளைஞா் கைது
கோபியில் ஆன்லைன் மூலம் போதை மாத்திரை விற்பனை: 3 போ் கைது
விடியோக்கள்

Balan: The boy Review | தாயைப் போல பிள்ளை! ஆனால்... | Chidambaram | Mollywood | Dinamani Talkies
தினமணி செய்திச் சேவை

மறுமணம் ஒரு குற்றமா? மனதை உலுக்கும் 'நூறு சாமி'
தினமணி செய்திச் சேவை

Samantha அதிரடி எப்படி இருக்கிறது? Engal Thangam Movie Review
தினமணி செய்திச் சேவை

ஹார்ட்டின் பட டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு
