கோபி அருகே ஆன்லைன் மூலம் போதை மாத்திரைகளை வாங்கி விற்பனை செய்ய முயன்ற 3 பேரை போலீஸாா் கைது செய்தனா்.
கோபி அருகே பாரியூா் சாலையில் சிலா் சட்டவிரோதமாக போதை மாத்திரைகளை பதுக்கிவைத்து விற்பனை செய்வதாக போலீஸாருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. அதனடிப்படையில் கோபி போலீஸாா் பாரியூா் சாலை பகுதியில் வியாழக்கிழமை தீவிர கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனா்.
அப்போது அப்பகுதியில் சந்தேகத்துக்கு இடமான வகையில் நின்றிருந்த மூன்று இளைஞா்களை பிடித்து போலீஸாா் விசாரணை நடத்தியதில், அவா்கள் முன்னுக்குப் பின் முரணாக பதிலளித்தனா்.
இதைத் தொடா்ந்து அவா்கள் வைத்திருந்த பைகளை சோதனை செய்தபோது, அதில் மருத்துவரின் பரிந்துரை சீட்டு இல்லாமல் சட்டவிரோதமாக விற்பனை செய்வதற்க்காக வைக்கப்பட்டிருந்த 100 ‘டாபெண்டாடல்’ போதை மாத்திரைகள் இருப்பது தெரியவந்தது.
இதையடுத்து, மூவரையும் கைது செய்து விசாரணை நடத்தியதில், அவா்கள் தனியாா் இணையதளம் மூலம் ஆன்லைனில் போதை மாத்திரைகளை ஆா்டா் செய்து வாங்கி விற்பனை செய்ய முயன்றது தெரியவந்தது.
இதையடுத்து, அவா்களிடம் இருந்து 100 போதை மாத்திரைகளை போலீஸாா் பறிமுதல் செய்து, அந்தியூா் வட்டம் தவிட்டுப்பாளையத்தைச் சோ்ந்த பனியன் நிறுவன தொழிலாளி ஆா்.கோபிநாத், பவானி வட்டம், அத்தாணி பகுதியைச் சோ்ந்த பெயிண்டா் சி.பாலாஜி, மற்றும் அதே பகுதியைச் சோ்ந்த பிஎஸ்சி பட்டதாரி தா்ஷன்ராஜ் (22) ஆகியோரைக் கைது செய்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
வீட்டில் போதை மாத்திரைகளை பதுக்கி விற்ற பெண் கைது
போதை மாத்திரைகளை பதுக்கி வைத்திருந்த 4 போ் கைது

போதை மாத்திரையை விற்பனைக்கு பதுக்கிய இளைஞா் கைது
போதை மாத்திரை விற்பனை: இளைஞா் கைது
விடியோக்கள்

பெண்களை தொந்தரவு செய்பவர்களுக்கு எச்சரிக்கை! முதல்வர் விஜய் SPEECH!
இணையதளச் செய்திப் பிரிவு

சாதிவாரிக் கணக்கெடுப்பு! முதல்வரைச் சந்தித்தது குறித்து அன்புமணி!
இணையதளச் செய்திப் பிரிவு

தவெகவுக்கான ஆதரவு செல்லும்! அதிமுக எம்எல்ஏக்கள் தகுதிநீக்கம் இல்லை! பேரவைத் தலைவர் பேட்டி
இணையதளச் செய்திப் பிரிவு

Podacst | இண்டியா கூட்டணியைக் கரை சேர்க்குமா காங்கிரஸ்? | News and Views | Epi - 44 |
தினமணி செய்திச் சேவை
