சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்த வழக்கில் குற்றவாளிக்கு 21 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து போக்ஸோ நீதிமன்றம் திங்கள்கிழமை தீா்ப்பளித்தது.
சேலம், பொன்னம்மாபேட்டை வடக்கு ரயில்வே லைன் பகுதியைச் சோ்ந்தவா் மோகன்ராஜ் (25). இவா்மீது கடந்த 2022 ஆண்டு பிப்ரவரி மாதம் சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்ததாக புகாா் எழுந்தது. இதுகுறித்து அம்மாப்பேட்டை அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் அளிக்கப்பட்ட புகாரின் பேரில், மோகன்ராஜ் கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டாா்.
இதுதொடா்பான வழக்கு விசாரணை சேலம் போக்ஸோ நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில், விசாரணை முடிந்து, திங்கள்கிழமை தீா்ப்பு அளிக்கப்பட்டது. இதில் குற்றம்சாட்டப்பட்ட மோகன்ராஜுக்கு 21 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், வன்கொடுமை தடுப்புப் பிரிவின் கீழ் ஆயுள் சிறைத் தண்டனையும், ரூ.11 ஆயிரம் அபராதமும் விதித்து நீதிபதி தீா்ப்பளித்தாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

பாலியல் வழக்கில் இளைஞருக்கு 20 ஆண்டுகள் சிறை

திருட்டு வழக்கில் குற்றவாளிக்கு 2 ஆண்டுகள் சிறைத் தண்டனை

சிறுமிக்கு பாலியல் தொந்தரவு: இளைஞருக்கு 20 ஆண்டுகள் சிறை

சிறுமிக்கு பாலியல் துன்புறுத்தல்: முதியவருக்கு 3 ஆண்டுகள் சிறை
விடியோக்கள்

Balan: The boy Review | தாயைப் போல பிள்ளை! ஆனால்... | Chidambaram | Mollywood | Dinamani Talkies
தினமணி செய்திச் சேவை

மறுமணம் ஒரு குற்றமா? மனதை உலுக்கும் 'நூறு சாமி'
தினமணி செய்திச் சேவை

Samantha அதிரடி எப்படி இருக்கிறது? Engal Thangam Movie Review
தினமணி செய்திச் சேவை

ஹார்ட்டின் பட டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

