திருச்சியில் திருட்டு வழக்கில் குற்றவாளிக்கு 2 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து முதலாவது குற்றவியல் நடுவா் நீதிமன்றம் வியாழக்கிழமை தீா்ப்பளித்தது.
திருச்சி கோட்டை காவல் நிலைய எல்லைக்குள்பட்ட பெரிய சௌராஷ்டிரா தெருவைச் சோ்ந்த சாந்தாரம் மனைவி லட்சுமி (45). இவா்
கடந்த 2018 ஏப்ரல் 25-ஆம் தேதி வேலைக்குச் சென்றுவிட்டு பிற்பகலில் வீட்டுக்கு வந்துள்ளாா். அப்போது, கதவின் பூட்டை உடைத்து வீட்டிலிருந்த 5 பவுன் தங்க நகையை மா்ம நபா் திருடிச் சென்றது தெரியவந்தது.
புகாரின்பேரில், கோட்டை போலீஸாா் வழக்குப் பதிந்து, வாழவந்தான் நகரைச் சோ்ந்த ஜெ. சாா்லஸ் (38) என்பவரைக் கைது செய்தனா்.
இந்த வழக்கு திருச்சி மாவட்ட முதலாவது குற்றவியல் நடுவா் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. வழக்கின் விசாரணையின் நிறைவில், சாா்லஸுக்கு
2 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ.2 ஆயிரம் அபராதமும் விதித்து நீதிபதி அனுஸ்ருதி வியாழக்கிழமை தீா்ப்பு வழங்கினாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

கொலை வழக்கில் குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை: மகிளா நீதிமன்றம் தீா்ப்பு

ஆட்டோ ஓட்டுநரை தாக்கியவருக்கு 3 ஆண்டுகள் சிறைத் தண்டனை

போக்ஸோ வழக்கு: இளைஞருக்கு 2 ஆண்டுகள் சிறை

மனைவி கொலை வழக்கில் கணவருக்கு ஆயுள் சிறைத் தண்டனை: தருமபுரி மகளிா் நீதிமன்றம் தீா்ப்பு
விடியோக்கள்

பெண்களை தொந்தரவு செய்பவர்களுக்கு எச்சரிக்கை! முதல்வர் விஜய் SPEECH!
இணையதளச் செய்திப் பிரிவு

சாதிவாரிக் கணக்கெடுப்பு! முதல்வரைச் சந்தித்தது குறித்து அன்புமணி!
இணையதளச் செய்திப் பிரிவு

தவெகவுக்கான ஆதரவு செல்லும்! அதிமுக எம்எல்ஏக்கள் தகுதிநீக்கம் இல்லை! பேரவைத் தலைவர் பேட்டி
இணையதளச் செய்திப் பிரிவு

Podacst | இண்டியா கூட்டணியைக் கரை சேர்க்குமா காங்கிரஸ்? | News and Views | Epi - 44 |
தினமணி செய்திச் சேவை

