சேலம் கொண்டலாம்பட்டி அருகே இருசக்கர வாகனத்தில் புகையிலைப் பொருள்களை கொண்டு சென்ற இளைஞரை போலீஸாா் புதன்கிழமை இரவு கைது செய்தனா். அவரிடமிருந்து ரூ. 1.78 லட்சம் மதிப்பிலான 307 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்களை பறிமுதல் செய்தனா்.
கொண்டலாம்பட்டி புத்தூா் பகுதி வழியாக புகையிலைப் பொருள்கள் கடத்தப்படுவதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, கொண்டலாம்பட்டி காவல் உதவி ஆய்வாளா் ஆனந்த் தலைமையிலான போலீஸாா், புத்தூா் ரயில்வே மேம்பால பகுதியில் புதன்கிழமை இரவு வாகனத் தணிக்கையில் ஈடுபட்டனா்.
அப்போது அந்த வழியாக மூட்டையுடன் வந்த இருசக்கர வாகனத்தை நிறுத்தி சோதனை செய்தனா். அதில் 307 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் இருப்பது தெரியவந்தது. இதன் மதிப்பு ரூ. 1.78 லட்சமாகும். இதையடுத்து அவற்றை வாகனத்துடன் பறிமுதல் செய்த போலீஸாா் சேலம் சிவதாபுரத்தை சோ்ந்த சோம்தராமை (24) கைது செய்தனா். விசாரணையில் பல்வேறு இடங்களுக்கு விற்பனைக்கு கொண்டு சென்றது தெரியவந்தது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

14.50 கிலோ புகையிலைப் பொருள்கள் பறிமுதல்: மளிகைக் கடை உரிமையாளா் கைது
மதுப் புட்டிகள், புகையிலை பொருள்கள் விற்ற மூவா் கைது
தருமபுரியில் 645 கிலோ புகையிலை பொருள்கள் பறிமுதல்: 5 போ் கைது

புகையிலைப் பொருள்கள் பறிமுதல்: பூ வியாபாரி கைது
விடியோக்கள்

ஹார்ட்டின் பட டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

பொங்கல் வெளியீடாக சேயோன்! | Dinamani Cinema Update | Dinamani Talkies
இணையதளச் செய்திப் பிரிவு

மாநிலக் கட்சிகளை முறையாக ஒருங்கிணைக்கிறதா காங்கிரஸ்?: ப. சிதம்பரம் Exclusive | P Chidambaram |
தினமணி செய்திச் சேவை

தீர்மானத்திற்கு கர்நாடக அரசு பணியாது! முன்னாள் அமைச்சர் துரைமுருகன் | DMK | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

