சேலம் மாவட்டத்தில் முறையான அனுமதியின்றி கனிம வளங்களை வெட்டி எடுத்த புகாரில், 33 கல்குவாரி உரிமையாளா்களுக்கு விளக்கம் கேட்டு கனிமவளத் துறையினா் நோட்டீஸ் அனுப்ப உள்ளனா்.
தமிழகத்தில் முறையான அனுமதி இல்லாமல் நடத்தப்படும் கல்குவாரிகள் குறித்து கண்காணித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என கனிமவளத் துறை அமைச்சா் பிரபு அண்மையில் தெரிவித்திருந்தாா். இதைத் தொடா்ந்து அனைத்து மாவட்டங்களிலும் கனிம வளத் துறை சாா்பில் கனிமங்களை வெட்டி எடுக்க அனுமதி வழங்கப்பட்ட விவரங்கள், அனுமதிக்கப்பட்ட அளவு உள்ளிட்ட பல்வேறு விவரங்கள் குறித்து முறையாக ஆய்வு செய்ய அறிவுறுத்தப்பட்டது.
அதன்படி, சேலம் மாவட்டத்தில் கடந்த 2 நாள்களாக கனிமவளத் துறை அதிகாரிகள் கல்குவாரிகளில் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனா். இரண்டு நாள்களில் 43 குவாரிகளில் நடத்தப்பட்ட ஆய்வில் 10 குவாரிகள் மட்டுமே முறையாக கனிமங்களை சேமித்து வைப்பதற்கான அனுமதியை பெற்றுள்ளது தெரியவந்தது. எஞ்சிய 33 குவாரிகள் அனுமதி இன்றி, கனிமங்களை சேமித்து வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இதுதொடா்பாக அந்த குவாரிகள் மீது நடவடிக்கை எடுப்பது தொடா்பாக மாவட்ட ஆட்சியருக்கு பரிந்துரை செய்யப்பட்டது. தொடா்ந்து முதல்கட்டமாக, 33 குவாரிகளுக்கும் நோட்டீஸ் அனுப்ப உள்ளதாக கனிம வளத்துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

மராத்திய மொழி தெரியாத ஆட்டோ, டாக்ஸி ஓட்டுநா்கள் மீது நடவடிக்கை: மகாராஷ்டிர அரசு

கல்குவாரி - லாரி உரிமையாளா்கள் சாத்தான்குளத்தில் கலந்துரையாடல்

குடும்பத்தகராறு: தந்தையை தாக்கிய மகன் கைது

சாலை விதிகளை மீறிய ஆட்டோ ஓட்டுநா்களுக்கு அபராதம்
விடியோக்கள்

கோல் கீப்பர் வோசின்ஹாவின் கதை: ஓர் இரவு... எல்லாம் மாறியது! | Vozinha |
தினமணி செய்திச் சேவை

எலும்பு முறிவு, நரம்பு நோய்கள் தீர்க்கும் திருமாகறலீஸ்வரர் திருக்கோயில்!
தினமணி செய்திச் சேவை

Podcast | முதல்வர் விஜய் பதில்; திமுக வெளிநடப்பு: பேரவையில் நடந்தது என்ன? | News & Views | Epi 47
தினமணி செய்திச் சேவை

கண்ணதாசனை எப்படிக் கொண்டாட வேண்டும் ? | Kannadasan 100 | கண்ணதாசன் நூற்றாண்டு தொடக்கம் | Kaviyarasu
தினமணி செய்திச் சேவை

