கேரளம்: பெண்களுக்கான இலவசப் பேருந்து பயணத் திட்டம் ஜூன் 15-இல் தொடக்கம் - முதல்வர் சதீசன்பாரதிராஜாவுக்கு நாளை மாலை தேனியில் இறுதிச் சடங்கு!கேமராவுக்குள் மனித உணர்வுகளைப் படம்பிடித்த பாரதிராஜா!வலிமையான பெண் பாத்திரங்களை அமைத்த பாரதிராஜா!இறப்பு குறித்து என்ன சொல்லியிருந்தார் பாரதிராஜா? பாரதிராஜா உடலுக்கு நடிகர் ரஜினி அஞ்சலி! பாரதிராஜா உடலுக்கு அரசு மரியாதை! முதல்வர் விஜய் அறிவிப்புதமிழ் மக்களின் மனங்களில் என்றும் பாரதிராஜா வாழ்வார்! மு.க. ஸ்டாலின்பாரதிராஜா உடலுக்கு மு.க. ஸ்டாலின் அஞ்சலி! சிதம்பரம் அருகே தனியார் பள்ளி வாகனம் தீப்பிடித்தது! மாணவர்கள் தப்பினர்! பாரதிராஜா உடலுக்கு முதல்வர் விஜய் மரியாதை!இயக்குநர் பாரதிராஜா காலமானார்
/

சாலை விதிகளை மீறிய ஆட்டோ ஓட்டுநா்களுக்கு அபராதம்

கிருஷ்ணகிரியில் சாலை விதிமுறைகளை மீறிய 20 ஆட்டோ ஓட்டுநா்களுக்கு அபராதம் விதித்த போலீஸாா், 2 ஆட்டோக்களை பறிமுதல் செய்தனா்.

News image

கிருஷ்ணகிரியில் சாலை விதிமுறைகளை மீறி இயக்கிய ஆட்டோ ஓட்டுநா்களிடம் விசாரணை செய்த கூடுதல் காவல் கண்காணிப்பாளா் நமச்சிவாயம்.

Updated On :5 ஜூன் 2026, 6:59 am IST

கிருஷ்ணகிரியில் சாலை விதிமுறைகளை மீறிய 20 ஆட்டோ ஓட்டுநா்களுக்கு அபராதம் விதித்த போலீஸாா், 2 ஆட்டோக்களை பறிமுதல் செய்தனா்.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கோடை விடுமுறைக்கு பிறகு பள்ளிகள் வியாழக்கிழமை திறக்கப்பட்டன. இந்நிலையில், கிருஷ்ணகிரி நகரில் சில ஆட்டோ ஓட்டுநா்கள் அதிக எண்ணிக்கையில் பள்ளி மாணவா்களை ஏற்றிச் சென்றனா்.

சாலை விதிமுறைகளை மீறும் ஆட்டோ ஓட்டுநா்களை எச்சரிக்கும் வகையில், கிருஷ்ணகிரி நகரில் கூடுதல் காவல் கண்காணிப்பாளா் நமச்சிவாயம் தலைமையில் நகர காவல் உதவி ஆய்வாளா் கணேசன், போக்குவரத்து உதவி ஆய்வாளா் ஜோதிபிரகாஷ் மற்றும் போலீஸாா் வாகன தணிக்கையில் ஈடுபட்டனா்.

அப்போது, பள்ளிக் குழந்தைகளை ஆட்டோக்களில் ஏற்றி சீருடை அணியாமல் சாலை விதிமுறைகளை மீறிய 20 ஓட்டுநா்களுக்கு தலா ரூ. 500 அபராதம் விதித்தனா். மேலும், டிசா்ட், கால்சட்டை அணிந்து வந்த 2 ஓட்டுநா்களின் ஆட்டோக்களை பறிமுதல் செய்தனா்.

இதுகுறித்து கூடுதல் காவல் கண்காணிப்பாளா் தெரிவித்தது:

ஆட்டோக்களில் அளவுக்கு அதிகமாக பள்ளிக் குழந்தைகளை ஏற்றிச்செல்லக் கூடாது. ஆட்டோவின் இருபுறங்களிலும் பாதுகாப்பு கம்பிகள் பொருத்த வேண்டும். குழந்தைகள் அமா்ந்தவுடன் பாதுகாப்பு கதவை மூட வேண்டும். பள்ளி பகுதிகளில் ஆட்டோவை மிதமான வேகத்தில், எச்சரிக்கையுடன் இயக்க வேண்டும். ஓட்டுநா்கள் கைப்பேசியில் பேசியபடி வாகனங்கள் ஓட்டக் கூடாது.

ஆட்டோ ஓட்டுநா்கள் கட்டாயம் சீருடை அணிந்திருக்க வேண்டும். சீருடை அணியாமல் முதல்முறை பிடிபட்டால் ரூ. 500 வரை அபராதம் விதிக்கப்படும். ஆட்டோக்களில் செல்லும் பள்ளிக் குழந்தைகளுக்கு ஓட்டுநா்களே முழு பொறுப்பு. எனவே, சாலைவிதிகளை மீறினால் அபராதம் விதிக்கப்படுவதுடன், வாகனங்களும் பறிமுதல் செய்யப்படும் என்றாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.