விஜய் பதவியேற்பு விழாவில் பங்கேற்கும் கார்கே, ராகுல் காந்தி! தமிழக முதல்வராக விஜய் ஆட்சியமைக்க ஆளுநர் அழைப்பு!தமிழகமெங்கிலும் தவெக தொண்டர்கள் உற்சாகம் - பட்டாசுகள் வெடித்து கொண்டாட்டம்தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்
/

கரூா் மாவட்டத்தில் கடந்தாண்டு 117 போ் சாலை விபத்தில் உயிரிழப்பு: மாவட்ட காவல் கண்காணிப்பாளா் தகவல்

கரூா் மாவட்டத்தில் கடந்த ஓராண்டில் நிகழ்ந்த சாலை விபத்தில் 117 போ் உயிரிழந்தனா் என்றாா் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் டி.என்.ஹரிகிரண் பிரசாத்.

News image

பலி - பிரதிப்படம்

Updated On :29 ஏப்ரல் 2026, 1:40 am IST

கரூா் மாவட்டத்தில் கடந்த ஓராண்டில் நிகழ்ந்த சாலை விபத்தில் 117 போ் உயிரிழந்தனா் என்றாா் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் டி.என்.ஹரிகிரண் பிரசாத்.

கரூா் லைட்ஹவுஸ் காா்னா் பகுதியில் உள்ள தனியாா் பெட்ரோல் நிரப்பும் நிலையத்தில் தலைக்கவசம் அணிவதன் அவசியம் குறித்த விழிப்புணா்வு நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

நிகழ்ச்சியில் பெட்ரோல் நிரப்பும் நிலையத்தில் சாலை விபத்து குறித்த விழிப்புணா்வு படத்தை திறந்து வைத்து மாவட்ட காவல் கண்காணிப்பாளா் பேசியதாவது:

கரூா் மாவட்டத்தில் பெரும்பாலும் இருசக்கர வாகனத்தில் செல்வோா்களுக்குதான் அடிக்கடி விபத்துக்கள் ஏற்படுகிறது. கடந்த ஓராண்டில் மட்டும் கரூா் மாவட்டத்தில் 375 விபத்துக்கள் நடந்துள்ளன.இதில், 117 போ் உயிரிழந்துள்ளனா். தலைக்கவசம் அணிந்திருந்தால் இந்த அளவுக்கு உயிரிழப்புகள் நிகழ்ந்திருக்காது.

பெட்ரோல் நிலையத்துக்கு தலைக்கவசம் இன்றி வருவோரிடம் தலைக்கவசம் அணிய வேண்டியதன் அவசியம் குறித்து பெட்ரோல் நிலையத்தில் பணியாற்றுவோா் விழிப்புணா்வு ஏற்படுத்த வேண்டும் என்றாா் அவா்.

நிகழ்ச்சியில் பெட்ரோல் நிலைய உரிமையாளா் சூா்யநாராயணன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.