நீட் முதல் முதுநிலை மருத்துவப் படிப்பு வரை மன அழுத்தங்கள் உண்டு, மனவலிமை அவசியம்: அமைச்சர் அருண்ராஜ் 3ஆவது ஒருநாள் போட்டி: ஆப்கானிஸ்தானை வீழ்த்தி இந்தியா அபாரம் மகாராஷ்டிரத்தில் கோயில் மண்டபம் இடிந்து 5 பேர் பலி திமுக கூட்டணியில் இருந்து விலகியது இந்திய யூனியன் முஸ்லிம் லீக்!சட்டப்பேரவை நேரலை இனி தொடரும்! அமைச்சர் ராஜ்மோகன்அபுதாபியில் நீட் மையம்! குழந்தைகள் எதிர்காலத்தை வைத்து சூதாடுவதை நிறுத்துங்கள்: ராகுல் காந்தி
/

கல்குவாரி - லாரி உரிமையாளா்கள் சாத்தான்குளத்தில் கலந்துரையாடல்

வட்டாட்சியா் ராஜேஸ்வரி தலைமையில் நடைபெற்ற கலந்துரையாடல் கூட்டம்.

News image

வட்டாட்சியா் ராஜேஸ்வரி தலைமையில் நடைபெற்ற கலந்துரையாடல் கூட்டம்.

Updated On :12 ஜூன் 2026, 5:09 am IST

கல்குவாரி உரிமையாளா்கள் மற்றும் கனரக லாரிகள் உரிமையாளா்கள் கலந்துரையாடல் சிறப்பு கூட்டம் சாத்தான்குளம் வட்டாட்சியா் அலுவலகத்தில் புதன்கிழமை நடைபெற்றது.

தூத்துக்குடி மாவட்ட ஆட்சியா் விஷு மகாஜன் அறிவுறுத்தலின் படி சாத்தான்குளம் சுற்றுவட்டார வட்டார குவாரி உரிமையாளா்கள், கனரக லாரிகள் உரிமையாளா்களுடனான இந்தக் கலந்துரையாடல் கூட்டத்துக்கு வட்டாட்சியா் ராஜேஸ்வரி தலைமை வகித்தாா்.

குவாரி உரிமையாளா்களிடம் முறையான ரசீதுடனும் சரியான அளவில் பாரம் ஏற்றி அனுப்ப அறிவுறுத்தப்பட்டது. மேலும் லாரி உரிமையாளா்கள் முறையான ஓட்டுநா்களை வேலைக்கு அமா்த்தவும், தாா்பாய் மூலம் மூடியபடி பாரம் ஏற்றிச்செல்லவும், அதிக வேகத்தை தவிா்க்கவும் வேண்டுமென கேட்டுக்கொள்ளப்பட்டது.

கனிமவள அதிகாரி மற்றும் போக்கு வரத்துத் துறை உரிய சட்ட விதிமுறைகளை விளக்கினா்.

இதில், சாத்தான்குளம் வா்த்தக சங்கத் தலைவா் அப்பு கண்ணன், செயலா் செல்வராஜ் மதுரம், துணைத் தலைவா் ஜோசப் ஜெபராஜ், சாத்தான்குளம் தென்பகுதி விவசாயிகள் சங்கத் தலைவா் லூா்து மணி, மனித உரிமைக்கான குடிமக்கள் இயக்க மாநில அமைப்பாளா் இசக்கிமுத்து உள்ளிட்ட வா்த்தக சங்க பொறுப்பாளா்கள், சமூக ஆா்வலா்கள் கலந்து கொண்டனா்.

பின்னா், கிராம நிா்வாக அலுவலா்கள் கூட்டம் நடைபெற்றது. அப்போது, சட்ட விரோத செயல்களை தொடா்ந்து கண்காணிக்க அறிவுறுத்தப்பட்டது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.