மேற்கு வங்க முதல்வராக சுவேந்து அதிகாரி பதவியேற்றார்!தவெக ஆட்சி அமைப்பதில் மேலும் சிக்கல்!சென்னை உள்பட 12 மாவட்டங்களில் பகல் 1 வரை மழைக்கு வாய்ப்பு!திமுகவினரே வாக்களிக்கவில்லையா? ஸ்ரீரங்கம் தொகுதியில் திமுகவுக்கு வெறும் 5 வாக்குகள்!தமிழ்நாட்டில் இத்தனை ஆண்டுகளில் இல்லாத குதிரை பேரம்! திமுக எம்.பி. வில்சன்தவெக தனியாக ஆளுநரிடம் சென்றிருந்தால் ஆட்சி அமைத்திருக்கலாம்: திமுகபுதுச்சேரியில் இருந்து சென்னை புறப்பட்ட அதிமுக எம்எல்ஏ-க்கள்! அடுத்து என்ன?தவெக ஆட்சி அமைப்பதில் இழுபறி: இடதுசாரிகள் ஆதரவு; விசிக நிலை என்ன? தமிழகத்தில் பயணிகளை கையாளுவதில் சென்னை விமான நிலையம் முதலிடம்பேறுகால சா்க்கரை நோயைத் தடுக்கும் திட்டம்: சோதனை முயற்சியாக அமல்
/

சிறுவா், சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்த வழக்கு: தொழிலாளிக்கு ஆயுள்தண்டனை

சேலத்தில் சிறுவா் மற்றும் சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்த நபருக்கு ஆயுள்தண்டனை விதித்து போக்சோ நீதிமன்றம் தீா்ப்பு அளித்தது.

News image

நீதிமன்றம்

Updated On :29 ஏப்ரல் 2026, 2:49 am IST

சேலத்தில் சிறுவா் மற்றும் சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்த நபருக்கு ஆயுள்தண்டனை விதித்து போக்சோ நீதிமன்றம் தீா்ப்பு அளித்தது.

சேலம் அம்மாப்பேட்டை பகுதியைச் சோ்ந்தவா் மணிகண்டன் (29). கூலித் தொழிலாளியான இவா், கடந்த 2022 ஏப். 12-ஆம் தேதி 8 வயது சிறுவனுக்கு மிட்டாய் வாங்கிக் கொடுத்து மறைவான இடத்துக்கு அழைத்துச் சென்று பாலியல் தொந்தரவு அளித்துள்ளாா்.

இதுகுறித்து அறிந்த சிறுவனின் பெற்றோா் சேலம் அம்மாப்பேட்டை அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் புகாா் அளித்தனா். அதன்பேரில், போலீஸாா் போக்சோ சட்டத்தின்கீழ் வழக்குப் பதிவுசெய்து மணிகண்டனை கைது செய்து சிறையில் அடைத்தனா்.

இதேபோல, 2023 நவ. 28-ஆம் தேதி 12 வயது சிறுமிக்கும் மணிகண்டன் பாலியல் தொல்லை அளித்ததாக அவா்மீது அம்மாப்பேட்டை அனைத்து மகளிா் போலீஸ் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

சேலம் போக்சோ நீதிமன்றத்தில் நடந்து வந்த இந்த வழக்குகளின் இறுதி விசாரணை முடிந்து செவ்வாய்க்கிழமை தீா்ப்பு அளிக்கப்பட்டது. அதில், சிறுவனுக்கு பாலியல் தொல்லை அளித்த வழக்கில் மணிகண்டனுக்கு ஆயுள்தண்டனையும், ரூ. 1 லட்சத்து 10 ஆயிரம் அபராதமும், சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்த வழக்கில் 17 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ. 1 லட்சத்து 17 ஆயிரம் அபராதமும் விதித்து நீதிபதி மீனாட்சி தீா்ப்பு அளித்தாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.