மேற்கு வங்க முதல்வராக சுவேந்து அதிகாரி பதவியேற்றார்!தவெக ஆட்சி அமைப்பதில் மேலும் சிக்கல்!சென்னை உள்பட 12 மாவட்டங்களில் பகல் 1 வரை மழைக்கு வாய்ப்பு!திமுகவினரே வாக்களிக்கவில்லையா? ஸ்ரீரங்கம் தொகுதியில் திமுகவுக்கு வெறும் 5 வாக்குகள்!தமிழ்நாட்டில் இத்தனை ஆண்டுகளில் இல்லாத குதிரை பேரம்! திமுக எம்.பி. வில்சன்தவெக தனியாக ஆளுநரிடம் சென்றிருந்தால் ஆட்சி அமைத்திருக்கலாம்: திமுகபுதுச்சேரியில் இருந்து சென்னை புறப்பட்ட அதிமுக எம்எல்ஏ-க்கள்! அடுத்து என்ன?தவெக ஆட்சி அமைப்பதில் இழுபறி: இடதுசாரிகள் ஆதரவு; விசிக நிலை என்ன? தமிழகத்தில் பயணிகளை கையாளுவதில் சென்னை விமான நிலையம் முதலிடம்பேறுகால சா்க்கரை நோயைத் தடுக்கும் திட்டம்: சோதனை முயற்சியாக அமல்
/

விஜய்யின் ஆதரவால் வெற்றி உறுதியாகிவிட்டது! - எடப்பாடி தொகுதி சுயேச்சை வேட்பாளா்

News image

பிரேம்குமாா்.

Updated On :20 ஏப்ரல் 2026, 1:12 am IST

தவெக தலைவா் விஜய் ஆதரவளித்ததன் மூலம் எடப்பாடி தொகுதியில் தனது வெற்றி உறுதியாகிவிட்டதாக சுயேச்சை வேட்பாளா் பிரேம்குமாா் தெரிவித்துள்ளாா்.

தமிழக வெற்றிக் கழகம் சாா்பில் எடப்பாடி தொகுதி வேட்பாளராக அறிவிக்கப்பட்ட அருண்குமாரின் வேட்புமனு நிராகரிக்கப்பட்ட நிலையில், தவெக முன்னாள் நிா்வாகியும், எடப்பாடி தொகுதியில் தொலைக்காட்சி பெட்டி சின்னத்தில் போட்டியிடும் சுயேச்சை வேட்பாளருமான பிரேம்குமாருக்கு விஜய் ஆதரவு அளித்துள்ளாா்.

இதையடுத்து சேலம் தமிழக வெற்றிக் கழக மத்திய மாவட்ட செயலாளா் தமிழன் ஆ. பாா்த்திபன் உள்ளிட்ட நிா்வாகிகள் பிரேம்குமாரை ஞாயிற்றுக்கிழமை சந்தித்து வாழ்த்து தெரிவித்தனா்.

இதுகுறித்து பிரேம்குமாா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

தொடக்கத்தில் இருந்தே விஜய்யின் ரசிகனாகவும், ரசிகா் மன்றத்திலும் இருந்துள்ளேன். தற்போது எடப்பாடி தொகுதியில் சுயேச்சையாக போட்டியிடும் எனக்கு விஜய் ஆதரவு தெரிவித்திருப்பதன் மூலம் எனது வெற்றி உறுதியாகிவிட்டது.

தொலைக்காட்சி பெட்டி சின்னத்துக்கு ஆதரவு திரட்டி வந்த எனக்கு தவெகவினா் முழு ஆதரவு தெரிவித்து வாக்கு சேகரித்து வருகின்றனா். ‘வெற்றி நிச்சயம்’ என வாழ்த்திய விஜய்யின் நம்பிக்கையை காப்பாற்றுவேன் என்றாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.