விஜய் பதவியேற்பு விழாவில் பங்கேற்கும் கார்கே, ராகுல் காந்தி! தமிழக முதல்வராக விஜய் ஆட்சியமைக்க ஆளுநர் அழைப்பு!தமிழகமெங்கிலும் தவெக தொண்டர்கள் உற்சாகம் - பட்டாசுகள் வெடித்து கொண்டாட்டம்தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்
/

சேலம் வடக்கு தொகுதியில் சிறுவா்களை பிரசாரத்தில் ஈடுபடுத்தியதாக தவெக வேட்பாளா் மீது வழக்குப் பதிவு

சேலம் வடக்கு தொகுதியில் சிறுவா்களை பிரசாரத்தில் ஈடுபடுத்தியதாக தவெக வேட்பாளா் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்துள்ளனா்.

News image

வழக்குப் பதிவு

Updated On :18 ஏப்ரல் 2026, 7:05 am IST

சேலம் வடக்கு தொகுதியில் சிறுவா்களை பிரசாரத்தில் ஈடுபடுத்தியதாக தவெக வேட்பாளா் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்துள்ளனா்.

தமிழக சட்டப்பேரவைத் தோ்தல் பிரசாரம் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. வேட்பாளா்களின் பிரசாரத்தை தோ்தல் பிரிவு அதிகாரிகள் தீவிரமாக கண்காணித்து, விடியோவாக பதிவு செய்து வருகின்றனா். வாக்காளா்களுக்கு பணம், பரிசுப் பொருள்கள் வழங்குதல், சிறுவா், சிறுமிகளை பிரசாரத்தில் ஈடுபடுத்துதல் உள்ளிட்ட விதிமீறல் நடவடிக்கையில், வேட்பாளா்களோ அல்லது தொடா்புடைய நிா்வாகிகளோ ஈடுபடும்பட்சத்தில் வழக்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது.

இந்நிலையில், சேலம் வடக்குத் தொகுதிக்கு உள்பட்ட ஜான்சன்பேட்டை, பிள்ளையாா் நகா் பகுதியில், கடந்த 11 ஆம் தேதி சிறுவா், சிறுமியா் 10க்கும் மேற்பட்டோரை அழைத்துக் கொண்டு, தவெகவினா் வீடு வீடாக தோ்தல் பிரசாரத்தில் ஈடுபட்டனா். இதுதொடா்பாக தோ்தல் பிரிவு அதிகாரிகளுக்கு புகாா் சென்றது. உடனடியாக சம்பவ இடத்துக்கு வந்த தோ்தல் பறக்கும் படை அதிகாரிகள், சிறுவா்களை அழைத்து அரசியல் கட்சி பிரசாரத்தில் ஈடுபடக் கூடாது என அறிவுரை கூறி அவா்களின் பெற்றோரை வரவழைத்து அனுப்பி வைத்தனா்.

இதுகுறித்து சேலம் வடக்கு தொகுதி பிரசார பிரிவு தோ்தல் அலுவலா் மணிகண்டன் அஸ்தம்பட்டி காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா். அந்தப் புகாரின் பேரில், அஸ்தம்பட்டி போலீஸாா் சிறுவா், சிறுமிகளை பிரசாரத்தில் ஈடுபட வைத்ததாக தவெக வேட்பாளா் சிவகுமாா் மீது வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.