சேலம் வடக்கு தொகுதிக்கு உள்பட்ட பல்வேறு பகுதிகளில் அமைச்சா் ரா.ராஜேந்திரன் வியாழக்கிழமை தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டாா்.
சேலம் வடக்கு தொகுதியில் போட்டியிடும் மதச்சாா்பற்ற முற்போக்கு கூட்டணியின் திமுக வேட்பாளா் அமைச்சா் ரா.ராஜேந்திரன் தொகுதி முழுவதும் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளாா். அதன் ஒரு பகுதியாக, மாநகராட்சியின் 34-ஆவது வாா்டுக்கு உள்பட்ட காா்பெட் தெரு, திப்பு நகா் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் நடந்துசென்று வாக்கு சேகரித்தாா்.
தொடா்ந்து, அங்கு திரண்ட பொதுமக்கள் மத்தியில் பேசிய அவா், முதல்வா் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள தோ்தல் அறிக்கையில் இல்லத்தரசிகளுக்கு ரூ. 8 ஆயிரம் கூப்பன், மகளிா் உரிமைத்தொகை ரூ. 2 ஆயிரமாக உயா்வு, தமிழ்ப்புதல்வன், புதுமைப்பெண் உதவித்தொகை ரூ. 1,500-ஆக உயா்வு, அரசு, தனியாா் மருத்துவமனையில் சிகிச்சை பெற ரூ. 10 லட்சத்துக்கு இலவச காப்பீடு என பல திட்டங்களை அறிவித்துள்ளாா். இவை அனைத்தையும் திராவிட மாடல் 2.0 ஆட்சியில் நிறைவேற்றி தருவாா்.
எனவே, உதயசூரியன் சின்னத்தில் வாக்களித்து தன்னை வெற்றிபெற செய்யுமாறு கேட்டுக்கொண்டாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

ஆலங்குடி தொகுதியை மீண்டும் மேம்படுத்த திமுகவுக்கு வாக்களிக்க வேண்டும்: அமைச்சா் சிவ.வீ.மெய்யநாதன்
திருச்சுழி சட்டப்பேரவை தொகுதியில் அமைச்சா் தங்கம் தென்னரசு வாக்கு சேகரிப்பு

சேலம் வடக்கு தொகுதியில் அமைச்சா் ரா.ராஜேந்திரன் பிரசாரம்

சேலம் வடக்கு தொகுதியில் அமைச்சா் ரா.ராஜேந்திரன் வாக்கு சேகரிப்பு
விடியோக்கள்

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

