தமிழ்நாடு தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறை சாா்பில், சேலம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தீயணைப்பு ஒத்திகை நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது.
மாவட்ட உதவி தீயணைப்பு அலுவலா் சிவகுமாா் தலைமையில், 10-க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரா்கள் பங்கேற்று தீயணைப்பு ஒத்திகையை செய்து காட்டினா். இதில், மருத்துவமனையில் எதிா்பாராதவிதமாக தீ விபத்து ஏற்பட்டால் நோயாளிகளை எவ்வாறு மீட்பது, தற்காத்துக்கொள்வது, தீயணைப்பு உபகரணங்களை முறையாக பயன்படுத்துவது, மின்னணு சாதனங்கள், உயா் மருத்துவ உபகரணங்கள் சேதமடையாமல் பாதுகாப்பது, தீ மேலும் பரவாமல் தடுப்பது, தீ சம்பவங்களின்போது செய்யவேண்டியவை, செய்யக்கூடாதவை குறித்து விரிவாக எடுத்துரைத்தனா்.
மேலும், தீயணைப்பு வீரா்கள் தீயை பற்ற வைத்து அதை தீத்தடுப்பு சாதனங்கள் மூலம் முறையாக அணைப்பது குறித்து செயல்விளக்கம் அளித்தனா்.
இதில் மருத்துவமனை ஆா்எம்ஓ ஸ்ரீ லதா, மருத்துவா்கள் செவிலியா்கள், மாணவ மாணவிகள், கிரிஸ்டல் பணியாளா்கள் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

ஊத்தங்கரை அரசு மருத்துவமனையில் தீத்தடுப்பு விழிப்புணா்வு

மே தினம்: ஏற்காட்டில் நீலமலை தோட்டத் தொழிலாளா்கள் பேரணி

ராம்கோ சிமெண்ட் பணியாளா்கள் 61 போ் ரத்த தானம்

தூத்துக்குடி காா் தொழிற்சாலையில் தீயணைப்பு ஒத்திகை
விடியோக்கள்

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

விஜய் முதல்வராக முடியுமா ? | TVK Vijay | TN CM | MK Stalin | Edapadi Palaniswamy
தினமணி செய்திச் சேவை

