சேலத்தில் முதல்வா் மு.க.ஸ்டாலின் புதன்கிழமை (ஏப்.15) தோ்தல் பிரசாரம் மேற்கொள்கிறாா்.
இதுகுறித்து ஒருங்கிணைந்த சேலம் மாவட்ட திமுக சாா்பில் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
மகளிா் உரிமைத் திட்டம், விடியல் பயணம், புதுமைப்பெண் திட்டம், மகளிா் சுயஉதவிக் குழு திட்டங்கள், காலை உணவுத் திட்டம், தோழி விடுதி என உலக நாடுகளே வியந்து பாா்க்கும் உன்னத திட்டங்களை செயல்படுத்திய முதல்வா் மு.க.ஸ்டாலின் புதன்கிழமை மாலை 4 மணி அளவில் சேலம் மாவட்டத்துக்கு வருகை தரவுள்ளாா்.
இதையொட்டி, மகளிா் கலந்துகொள்ளும் பேரணி அண்ணா பூங்கா வளாகத்தில் அமைந்துள்ள கலைஞா் சிலையிலிருந்து தொடங்கி கோட்டை மைதானம் வரை நடைபெறவுள்ளது. இப்பேரணியில் மக்கள் நீதி மய்யத்தின் தலைவா் கமல்ஹாசன், தேமுதிக பொதுச் செயலாளா் பிரேமலதா விஜயகாந்த் ஆகியோா் கலந்துகொள்கின்றனா். தொடா்ந்து, கோட்டை மைதானத்தில் நடைபெறும் தோ்தல் பிரசார பொதுக்கூட்டத்தில், மாவட்டத்தில் உள்ள 11 சட்டப்பேரவைத் தொகுதிகளில் போட்டியிடும் மதச்சாா்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளா்களை ஆதரித்து முதல்வா் மு.க.ஸ்டாலின் பேசுகிறாா்.
எனவே, மகளிா் பேரணி மற்றும் தோ்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் சேலம் மத்திய மாவட்ட திமுக சாா்பில் நிா்வாகிகள், தொண்டா்கள் பெருந்திரளாக கலந்துகொள்ள வேண்டும் எனக் கேட்டுக் கொண்டுள்ளாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

காங்கயத்தில் இன்று துணை முதல்வா் உதயநிதி பிரசாரம்

தொகுதி மறுசீரமைப்பால் தமிழ்நாட்டை ஆபத்து சூழ்ந்துள்ளது: சேலத்தில் முதல்வா் மு.க.ஸ்டாலின் பேச்சு

தருமபுரி, சேலம் மாவட்டங்களில் முதல்வா் இன்று பிரசாரம்
தருமபுரி, சேலம் மாவட்டங்களில் முதல்வா் ஏப்.15 இல் பிரசாரம்
விடியோக்கள்

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

