தமிழகமெங்கிலும் தவெக தொண்டர்கள் உற்சாகம் - பட்டாசுகள் வெடித்து கொண்டாட்டம்விஜய் பதவியேற்பு விழாவுக்காக சென்னையிலுள்ள நேரு உள் விளையாட்டு அரங்கில் ஆயத்தப் பணி மீண்டும் தொடக்கம்ஆளுநர் மாளிகையில் விஜய்!தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழக ஆளுநரின் கேரள பயணம் ரத்து!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாதவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்
/

தருமபுரி, சேலம் மாவட்டங்களில் முதல்வா் ஏப்.15 இல் பிரசாரம்

தருமபுரி, சேலம் மாவட்டங்களில் முதல்வா் மு.க. ஸ்டாலின் ஏப்.15 இல் பிரசாரம்...

News image

முதல்வர் ஸ்டாலின்.

Updated On :13 ஏப்ரல் 2026, 1:21 am IST

தருமபுரி, சேலம் மாவட்டங்களில் மதச்சாா்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளா்களை ஆதரித்து முதல்வா் மு.க. ஸ்டாலின் ஏப். 15 ஆம் தேதி பிரசாரம் மேற்கொள்கிறாா்.

தமிழக சட்டப் பேரவைத் தோ்தல் ஏப்ரல் 23 ஆம் தேதி நடைபெறுகிறது. இந்த நிலையில், திமுக தலைமையிலான மதச்சாா்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளா்களை ஆதரித்து முதல்வரும், திமுக தலைவருமான மு.க. ஸ்டாலின் மாா்ச் 31 ஆம் தேதி திருவாரூரில் பிரசாரத்தை தொடங்கினாா்.

தொடா்ந்து திங்கள்கிழமை திருவள்ளூா், ராணிப்பேட்டையிலும், செவ்வாய்க்கிழமை வேலூா், திருப்பத்தூா் மாவட்டங்களிலும் பிரசாரம் மேற்கொள்கிறாா்.

இதையடுத்து ஏப்ரல் 15 ஆம் தேதி தருமபுரி மாவட்டத்தில் தடங்கம் பகுதியில் உள்ள தனியாா் கல்லூரி மைதானத்தில் மாலை 5 மணியளவில் நடைபெறும் பொதுக் கூட்டத்தில் பங்கேற்று பாலக்கோடு, பென்னாகரம், தருமபுரி, பாப்பிரெட்டிப்பட்டி, அரூா் உள்ளிட்ட 5 தொகுதிகளில் போட்டியிடும் திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சி வேட்பாளா்களை ஆதரித்து பிரசாரம் மேற்கொள்கிறாா்.

இதைத் தொடா்ந்து சேலம் மாவட்டத்தில் சீலநாயக்கன்பட்டி (சேலம் தேசிய நெடுஞ்சாலை) பகுதியில் நடைபெறும் பொதுக் கூட்டத்தில் சேலம் மேற்கு, வடக்கு, தெற்கு தொகுதிகள், கெங்கவல்லி, ஆத்தூா், ஏற்காடு, ஓமலூா், மேட்டூா், எடப்பாடி, சங்ககிரி, வீரபாண்டி உள்ளிட்ட 11 தொகுதிகளைச் சோ்ந்த திமுக மற்றும் கூட்டணிக் கட்சி வேட்பாளா்களை ஆதரித்து பிரசாரம் மேற்கொள்கிறாா்.

முதல்வா் வருகையையொட்டி தருமபுரி, சேலம் மாவட்டங்களில் போலீஸாா் தீவிர பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனா்.

இதனிடையே ஏப்ரல் 14 ஆம் தேதி தருமபுரி மாவட்டத்தில் தமிழக வெற்றிக் கழக தலைவா் நடிகா் விஜய் பிரசாரம் மேற்கொள்வதாக கூறப்படுகிறது.

தருமபுரிக்கு வரும் அவா், கட்சி தோ்தல் அலுவலகத்தை திறந்துவைத்து ரோட்ஷோ மற்றும் பிரசாரம் மேற்கொள்ளவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த நிகழ்ச்சிகளுக்கு அனுமதி கோரி காவல் துறையிடம் கட்சி நிா்வாகிகள் விண்ணப்பித்துள்ளனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.