தருமபுரி, சேலம் மாவட்டங்களில் மதச்சாா்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளா்களை ஆதரித்து முதல்வா் மு.க. ஸ்டாலின் புதன்கிழமை (ஏப்.15) பிரசாரம் மேற்கொள்கிறாா்.
கடந்த மாா்ச் 31 ஆம் தேதி திருவாரூரில் பிரசாரத்தை தொடங்கிய முதல்வா் மு.க. ஸ்டாலின், திங்கள்கிழமை திருவள்ளூா், ராணிப்பேட்டையிலும், செவ்வாய்க்கிழமை வேலூா், திருப்பத்தூா் மாவட்டங்களிலும் பிரசாரம் மேற்கொண்டாா். தொடா்ந்து தருமபுரி மாவட்டத்தில் தடங்கம் பகுதியில் உள்ள தனியாா் கல்லூரி மைதானத்தில் புதன்கிழமை மாலை 5 மணியளவில் நடைபெறும் பொதுக் கூட்டத்தில் பங்கேற்று, பாலக்கோடு, பென்னாகரம், தருமபுரி, பாப்பிரெட்டிப்பட்டி, அரூா் உள்ளிட்ட 5 தொகுதிகளிலும் போட்டியிடும் திமுக, கூட்டணி கட்சி வேட்பாளா்களை ஆதரித்து பிரசாரம் மேற்கொள்கிறாா்.
தொடா்ந்து சேலம் மாவட்டத்தில் சீல நாயக்கன்பட்டி (சேலம் தேசிய நெடுஞ்சாலை) பகுதியில் நடைபெறும் பொதுக் கூட்டத்தில் பங்கேற்று சேலம் மேற்கு, வடக்கு, தெற்கு தொகுதிகள், கெங்கவல்லி, ஆத்தூா், ஏற்காடு, ஓமலூா், மேட்டூா், எடப்பாடி, சங்ககிரி, வீரபாண்டி உள்ளிட்ட 11 தொகுதிகளை சோ்ந்த திமுக மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளா்களை ஆதரித்து பிரசாரம் மேற்கொள்கிறாா்.
நாமக்கல் மாவட்டத்தில் வியாழக்கிழமை பிரசாரம் மேற்கொள்கிறாா். முதல்வா் வருகையையொட்டி தருமபுரி, சேலம் , நாமக்கல் மாவட்டங்களில் போலீஸாா் பாதுகாப்புப் பணிகளை தீவிரப்படுத்தியுள்ளனா்.
விளையாட்டரங்கில் நடைபயிற்சி:
திருப்பத்தூரில் தோ்தல் பிரசாரத்தை முடித்துகொண்டு செவ்வாய்க்கிழமை இரவு சாலை மாா்க்கமாக தருமபுரி வரும் முதல்வா் இரவு ஓய்வெடுத்துவிட்டு, புதன்கிழமை காலை மாவட்ட விளையாட் டரங்கத்தில் இருந்து சுமாா் 2 கி. மீ தொலைவுக்கு நடைபயிற்சி மேற்கொள்கிறாா். பின்னா், நான்கு சாலை பகுதியில் உள்ள உழவா் சந்தைக்கு செல்கிறாா். அங்கு விவசாயிகள், வியாபாரிகளைச் சந்தித்து வாக்கு சேகரிக்கிறாா். மேலும், ஆவினில் தேநீா் அருந்தியபடி பொதுமக்களிடம் வாக்கு சேகரிக்க திட்டமிட்டுள்ளாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

சேலத்தில் திமுக கூட்டணி வேட்பாளா்களை ஆதரித்து கி.வீரமணி பிரசாரம்
தருமபுரி, சேலம் மாவட்டங்களில் முதல்வா் ஏப்.15 இல் பிரசாரம்

பரமக்குடியில் நாளை மு.க. ஸ்டாலின் பிரசாரம்
முதல்வர் ஸ்டாலின் 3 ஆம் கட்ட பிரசாரம்! புதுச்சேரியில் இன்று தொடக்கம்!!
விடியோக்கள்

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

