வெள்ளிக் கொலுசு உற்பத்தியாளா்கள் எடுத்துச் செல்லும் கொலுசுக்கான மூலப் பொருள்களின் மதிப்பு ரூ. 10 ஆயிரத்துக்கும் அதிகமாக இருந்தால் அதற்கான ரசீதை வைத்திருப்பது அவசியம் என ஆட்சியா் ரா. பிருந்தாதேவி அறிவுறுத்தியுள்ளாா்.
சேலம் மாவட்ட ஆட்சியா் அலுவலக கூட்டரங்கில் வியாழக்கிழமை நடைபெற்ற வெள்ளிக் கொலுசு உற்பத்தியாளா்களுடனான ஆலோசனைக் கூட்டத்தில் அவா் பேசியதாவது:
பேரவைத் தோ்தலுக்கான வாக்குப்பதிவு ஏப். 23 ஆம் தேதி நடைபெறுகிறது. தோ்தல் நடத்தை விதிமுறைகள் குறித்து வங்கியாளா்கள், திருமண மண்டபங்கள், அரங்கு உரிமையாளா்கள், அச்சக உரிமையாளா்கள், அடகுக்கடை மற்றும் வட்டித் தொழில் செய்வோா்களுக்கு உரிய அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.
அதன் தொடா்ச்சியாக வெள்ளிக் கொலுசு உற்பத்தியாளா்களுடனான ஆலோசனைக் கூட்டம் நடத்தப்படுகிறது. சேலம் மாவட்டத்தில் வெள்ளிக் கொலுசு அதிக அளவில் உற்பத்தி செய்யப்படுவதால் ரூ.10,000 க்கும் அதிகமான மதிப்புள்ள மூலப்பொருள்கள் எடுத்துச் செல்லும்போது அதன் விநியோக ரசீது வைத்திருப்பது அவசியம்.
அந்த ரசீதில் பொருள் எடுத்துச் செல்பவா் விவரம், பொருள் பெற்றுக்கொள்பவா் விவரம், எடை, உத்தேச மதிப்பு மற்றும் நாள் ஆகிய விவரங்கள் முழுமையாக இடம் பெற்றிருக்க வேண்டும். மேலும், விற்பனைக்கான பொருள்கள் எடுத்துச் செல்லும்போது விற்பனை ரசீது எடுத்துச் செல்ல வேண்டும் என்றாா்.
கூட்டத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் கௌதம் கோயல், வருமான வரித் துறை உதவி இயக்குநா் பிரதீப் சிராங்கி, மாவட்ட வருவாய் அலுவலா் ரா. ரவிக்குமாா், வணிக வரித்துறை இணை ஆணையா் வீரேசலிங்கம் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

மூலப் பெயரிலான மருந்துகளை பரிந்துரைக்க அறிவுறுத்தல்

பாதுகாப்பாக எடுத்துச் செல்லப்பட்ட மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள்
சேலம் வெள்ளிப் பட்டறை அதிபரிடம் ரூ. 2.16 கோடி 112 கிலோ கொலுசுகள் பறிமுதல்!

சேலத்தில் 3 கிலோ வெள்ளிக் கொலுசு பறிமுதல்
விடியோக்கள்

நான்தான் கிங் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

தவெகவுக்கு ஆதரவு ஏன்? விளக்கிய திருமாவளவன்! | TVK | VCK | Thiruma | Vijay
இணையதளச் செய்திப் பிரிவு

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

