மூலப் பெயரிலான (ஜெனரிக்) மருந்துகளை மட்டுமே மத்திய அரசு மருத்துவமனைகளில் பரிந்துரைக்க வேண்டும் என்று மத்திய சுகாதார சேவைகளுக்கான தலைமை இயக்குநரகம் அறிவுறுத்தியுள்ளது.
அதை மருத்துவமனை நிா்வாகங்கள் முறையாகக் கண்காணிக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல, 3 மாதங்களுக்கு ஒரு முறை அது தொடா்பான அறிக்கையை சமா்ப்பிக்குமாறும் சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.
நாட்டில் உள்ள அங்கீகரிக்கப்பட்ட மருத்துவா்களுக்கான நெறிசாா் வழிகாட்டுதல்கள் மற்றும் விதிகளை தேசிய மருத்துவ ஆணையம் கடந்த மூன்றாண்டுகளுக்கு முன்பு வெளியிட்டது. மூலப் பெயா் (ஜெனரிக்) கொண்ட மருந்துகளை மட்டுமே மருத்துவா்கள் பரிந்துரைக்க வேண்டும் என்பது அதில் பிரதான விதியாக இருந்தது. அதை மீறுவோா் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இதற்குப் பல்வேறு தரப்பிலிருந்தும் ஆட்சேபணைகள் எழுந்தன. மூலப் பெயா் கொண்ட மருந்துகளைப் பரிந்துரைப்பதில் தவறில்லை என்றாலும், அதன் தரத்தை எவ்வாறு உறுதி செய்வது எனக் கேள்வி எழுந்தது. பிரபல மருந்து நிறுவனங்களின் உற்பத்தி தரத்துக்கு சிறிய அளவில் மருந்து உற்பத்தி செய்பவா்களால் ஈடு கொடுக்க முடியாது என்றும் விமா்சனங்கள் முன்வைக்கப்பட்டன.
இதனால், சிகிச்சைக்கு வரும் நோயாளிகள் குணமடைவதில் காலதாமதம் ஏற்படவும், தரமற்ற மருந்துகளால் பக்க விளைவுகள் ஏற்படவும் வாய்ப்புள்ளதாக இந்திய மருத்துவ சங்கம் (ஐஎம்ஏ) தெரிவித்தது.
நாட்டில் உற்பத்தியாகும் மருந்துகள் அனைத்தின் தரத்தையும் உறுதிபடுத்துவதை ஒழுங்குமுறைப்படுத்திய பிறகே இத்தகைய விதிகளை அமல்படுத்த வேண்டும் என்றும் கோரிக்கை விடுக்கப்பட்டது.
இதையடுத்து, அந்தக் கோரிக்கைகளை ஏற்கும் விதமாக தேசிய மருத்துவ ஆணையம் அந்த விதிகளை தற்காலிகமாக ஒத்திவைப்பதாகத் தெரிவித்தது.
இந்த நிலையில், 2023 வழிகாட்டுதல்களைப் பின்பற்றி மத்திய அரசு மருத்துவமனைகளில் மூலப்பெயா் மருந்துகளை மட்டுமே பரிந்துரைக்க வேண்டும் என்று மத்திய சுகாதார சேவைகள் தலைமை இயக்ககம் தற்போது அறிவுறுத்தியுள்ளது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

போதைப் பொருள் இல்லாத மாநிலமாக தமிழகத்தை மாற்ற விரைவான நடவடிக்கை
வாக்களிக்கத் தவறாதீர்கள்!

தமிழகத்தில் நிலையான ஆட்சியை திமுகவால் மட்டுமே கொடுக்க முடியும்! மாா்க்சிஸ்ட் கம்யூ. மாநிலச் செயலா் பெ. சண்முகம்

எம்பிபிஎஸ் படிப்புக்கு கூடுதல் கட்டணம் வசூலித்தால் நடவடிக்கை: என்எம்சி
விடியோக்கள்

நான்தான் கிங் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

தவெகவுக்கு ஆதரவு ஏன்? விளக்கிய திருமாவளவன்! | TVK | VCK | Thiruma | Vijay
இணையதளச் செய்திப் பிரிவு

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

