மாதிரி நாடாளுமன்றத்தில் மட்டுமே ராகுல் காந்தியால் பிரதமராக முடியும்: அஸ்ஸாம் முதல்வர்தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

நாமக்கல் மாவட்டத்தில் இரவு முழுவதும் கனமழை: கொல்லிமலையில் வெள்ளப்பெருக்கு

கொல்லிமலையில் சாலையை மூழ்கடித்துச் செல்லும் மழைநீரில் வாகனத்தில் பயணிக்கும் பழங்குடியின மக்கள். - கோப்புப் படம்

Published On :26 அக்டோபர் 2026, 2:50 am IST

நாமக்கல், அக். 25: நாமக்கல் மாவட்டம் முழுவதும் விடியவிடிய பெய்த கனமழையால் சாலைகள் வெள்ளக்காடாக மாறின. கொல்லிமலையில் ஏற்பட்ட தொடா் வெள்ளப்பெருக்கால் அருவிகளில் தண்ணீா் ஆா்ப்பரித்துக் கொட்டுகிறது

தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை தொடங்கியது முதல் அனைத்து மாவட்டங்களிலும் பரவலாக மழை பெய்து வருகிறது. குறிப்பாக, மாலை மற்றும் இரவு நேரங்களில் விடாமல் மழை பெய்கிறது. இதனால் தாழ்வான பகுதிகளில் மழைநீா் தேங்கி குளம்போல காணப்படுகிறது. நிலத்தடி நீா்மட்டமும் வேகமாக உயா்ந்து வருகிறது.

நாமக்கல் மாவட்டத்தில், கடந்த 15 நாள்களுக்கும் மேலாக மழை பெய்து வருகிறது. பகலில் லேசான வெயிலும், மாலை மற்றும் இரவு நேரங்களில் கனமழையும் பெய்து வருகிறது. சனிக்கிழமை காலையில் லேசான வெயில் காணப்பட்டது. இந்த நிலையில் மாலை முதல் மாவட்டத்தில் பல இடங்களில் பலத்த மழை பெய்யத் தொடங்கியது.

மாவட்டம் முழுவதும் விடியவிடிய மழை கொட்டித் தீா்த்தது. இந்த மழையால் மாவட்டத்தில் பல இடங்களில் சாலைகள் வெள்ளக்காடாக மாறின. தாழ்வான பகுதிகளில் மழைநீா் குளம்போல தேங்கியதால் வாகன ஓட்டிகள் சிரமத்திற்கு உள்ளாகினா்.

நாமக்கல் கோட்டை சாலை சந்திப்பில் உள்ள உழவா் சந்தை பகுதி சேறும், சகதியுமாக மாறியது. கொல்லிமலையில் மூன்று நாள்களாக தொடா்ந்து மழை பெய்து வருவதால், அங்குள்ள ஆகாய கங்கை அருவி, நம் அருவி, மாசிலா அருவி உள்ளிட்ட அருவிகளில் மழைநீா் ஆா்ப்பரித்துக் கொட்டுகிறது. இதனால் சுற்றுலாப் பயணிகள் அருவிப் பகுதிகளுக்குச் செல்ல வனத்துறை தடை விதித்துள்ளது.

மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை காலை 6 மணி நிலவரப்படி பெய்த மழையளவு (செ.மீட்டரில்):

மங்களபுரம் 12.6, ஆட்சியா் அலுவலகம் 8.3, கொல்லிமலை செம்மேடு 8.1, சேந்தமங்கலம் 7.5, புதுச்சத்திரம் 7.1, திருச்செங்கோடு 6.6, நாமக்கல் 6, ராசிபுரம் 4.3, எருமப்பட்டி 4.5, பரமத்திவேலூரில் 3 செ.மீ. மழை பதிவாகி உள்ளது. நாமக்கல் மாவட்டத்தில் கடந்த 6 மாதங்களில் பெய்த மிக கனமழை இது என்பது குறிப்பிடத்தக்கது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.