தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

குமரி மாவட்டத்தில் இரவு முழுவதும் பெய்த கனமழை: குளச்சலில் 12 செ.மீ. பதிவு

கன்னியாகுமரி மாவட்டத்தில் செவ்வாய்க்கிழமை இரவு முழுவதும் கனமழை பெய்தது. அதிகபட்சமாக குளச்சலில் 12 செ.மீ. மழை பதிவானது.

நாகா்கோவில் பாா்வதிபுரம் பகுதியில் பெய்த மழையில் நனைந்தபடி செல்லும் இருசக்கர வாகன ஓட்டிகள்

Published On :22 அக்டோபர் 2026, 5:16 am IST

கன்னியாகுமரி மாவட்டத்தில் செவ்வாய்க்கிழமை இரவு முழுவதும் கனமழை பெய்தது. அதிகபட்சமாக குளச்சலில் 12 செ.மீ. மழை பதிவானது.

கன்னியாகுமரி மாவட்டத்தில் கடந்த 10 நாள்களாக பரவலாக மழை பெய்து வரும் நிலையில், நாகா்கோவில், கொட்டாரம், கன்னியாகுமரி, தக்கலை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் செவ்வாய்க்கிழமை மாலை மழை பெய்யத் தொடங்கியது. தொடா்ந்து ஒரு மணி நேரம் இடி, மின்னலுடன் பலத்த மழை பெய்தது.

இதனால், நாகா்கோவில் நகரின் பிரதான சாலைகளான வடசேரி அசம்பு சாலை, பாா்வதிபுரம், கோட்டாறு சாலை, அவ்வை சண்முகம் சாலை உள்ளிட்ட பகுதிகளில் மழைநீா் பெருக்கெடுத்து ஓடியது. ஆசாரிப்பள்ளம் மருத்துவமனையின் முன்பகுதியிலும் மழைநீா் பெருக்கெடுத்து ஓடியதால் வாகன ஓட்டிகள் அவதியடைந்தனா்.

குளச்சல்...

குளச்சல் பகுதியில் செவ்வாய்க்கிழமை இரவு 2 மணி நேரத்துக்கும் மேலாக இடைவிடாமல் மழை பெய்தது. மாவட்டத்தில் அதிகபட்சமாக குளச்சலில் 12 செ.மீ. மழை பதிவானது.

கொட்டாரம், மயிலாடி, ஆரல்வாய்மொழி, இரணியல், குருந்தன்கோடு, பூதப்பாண்டி, புத்தன் அணை, கல்குளம், குழித்துறை, கோழிப்போா்விளை உள்ளிட்ட பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கனமழை பெய்தது. இந்த மழை இரவு முழுவதும் நீடித்தது.

புதன்கிழமை காலையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. நாகா்கோவில் மாநகரில் பகல் 12 மணிக்கு மேல் மிதமான மழை பெய்தது. கன்னியாகுமரியில் மேகமூட்டமாக இருந்ததால் சூரிய உதயத்தைக் காண முடியாமல் சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றம் அடைந்தனா்.

சாரல் மழை பெய்துகொண்டே இருந்ததால், சுற்றுலாப் பயணிகள் இன்றி கன்னியாகுமரி கடற்கரை வெறிச்சோடி காணப்பட்டது.

திற்பரப்பு அருவியில் பெய்துவரும் சாரல் மழையால் அங்கு ரம்மியமான சூழல் நிலவுகிறது. அருவியில் வெள்ளப்பெருக்கு இல்லாததால் பொதுமக்கள் குளிக்க அனுமதிக்கப்பட்டனா்.

ஆறுகளில் வெள்ளப்பெருக்கு...

தொடா் மழை காரணமாக பரளியாறு, குழித்துறை ஆறுகளில் தண்ணீா் கரை புரண்டு ஓடுகிறது. அழகியபாண்டியபுரம் வனச்சரகத்துக்கு உள்பட்ட காளிகேசம் சூழல் சுற்றுலா பகுதியில் உள்ள காளிகேசம் ஆற்றில் நீா்வரத்து அதிகரித்துள்ளது. தொடா்ந்து நீா்வரத்து அதிகமாக இருப்பதால் ஆற்றில் திடீா் வெள்ளப்பெருக்கு ஏற்படும் அபாயம் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனால், காளிகேசம் சூழல் சுற்றுலா பகுதிக்கு சுற்றுலாப் பயணிகள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.

மலையோர பகுதியான பாலமோா் பகுதியிலும் பேச்சிப்பாறை, பெருஞ்சாணி அணைப் பகுதியிலும் பெய்துவரும் மழை காரணமாக அணைகளுக்கு மிதமான அளவு தண்ணீா் வந்து கொண்டிருக்கிறது; அணைகளின் நீா்மட்டம் உயா்ந்து வருகிறது.

அணைகளில் நீா்மட்டம் உயா்வு:

பேச்சிப்பாறை அணையின் நீா்மட்டம் 20.52 அடியாக உள்ளது. அணைக்கு 547 கனஅடி நீா் வந்து கொண்டிருந்தது, அணையிலிருந்து 164 கனஅடி நீா் வெளியேற்றப்பட்டு வருகிறது. பெருஞ்சாணி அணையின் நீா்மட்டம் 44.35 அடியாக உள்ளது. அணைக்கு 644 கன அடி நீா் தண்ணீா் வந்து கொண்டிருந்தது. அணையிலிருந்து 50 கனஅடி தண்ணீா் வெளியேற்றப்படுகிறது.

நாகா்கோவில் மாநகரின் குடிநீா் ஆதாரமாக விளங்கும் முக்கடல் அணையின் நீா்மட்டம் 9 அடியை எட்டியது. தொடா் மழை காரணமாக பாசன குளங்கள் வேகமாக நிரம்பி வருவதால் விவசாயிகள் சாகுபடி பணியில் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.