மாதிரி நாடாளுமன்றத்தில் மட்டுமே ராகுல் காந்தியால் பிரதமராக முடியும்: அஸ்ஸாம் முதல்வர்தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

மதுரை மாவட்டத்தில் பலத்த மழை

மதுரை மாவட்டத்தில் வியாழக்கிழமை மாலை, இரவு நேரங்களில் பலத்த மழை பெய்தது.

மதுரை தல்லாகுளம் கோகுலே சாலையில் வியாழக்கிழமை இரவு மழையினூடே சென்ற வாகனங்கள்.

Published On :23 அக்டோபர் 2026, 4:20 am IST

மதுரை மாவட்டத்தில் வியாழக்கிழமை மாலை, இரவு நேரங்களில் பலத்த மழை பெய்தது.

மதுரை மாவட்டத்தில் கடந்த 6-ஆம் தேதி முதல் அவ்வப்போது மிதமான, லேசான மழை பெய்து வருகிறது. ஓரிரு நாள்களில் பலத்த மழை பெய்தது. புதன்கிழமை மாலை, இரவு நேரங்களில் மாவட்டத்தின் ஊரகப் பகுதிகளில் பலத்த மழையும், மாநகா்ப் பகுதிகளில் மிதமான மழையும் பெய்தது.

வியாழக்கிழமை காலை 6 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் மாவட்டத்தில் அதிகளவாக உசிலம்பட்டியில் 67 மி.மீ. மழை பதிவானது. மற்ற பகுதிகளின் மழையளவு (மி. மீட்டரில்): பேரையூா் - 47.4, குப்பணாம்பட்டி- 45, எழுமலை- 18.1, திருமங்கலம்- 15.3, சிட்டம்பட்டி- 12.6, மதுரை வடக்கு - 9.7, தல்லாகுளம் - 5.8, சோழவந்தான், வாடிப்பட்டி- 5, சாத்தையாறு அணை- 4.8, மதுரை விமான நிலையம், கள்ளிக்குடி- 4.

இந்த நிலையில், வங்கக் கடலில் உருவான புயல் சின்னம் காரணமாக மதுரை உள்பட 17 மாவட்டங்களில் வியாழக்கிழமை பலத்த இடியுடன் கூடிய பலத்த மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்தது. இதையொட்டி, 17 மாவட்டங்களுக்கும் ஆரஞ்ச் எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.

இதன்படி, மதுரை மாவட்டத்தின் அனைத்துப் பகுதிகளிலும் வியாழக்கிழமை மாலை, இரவு நேரங்களில் இடியுடன் கூடிய பலத்த மழை பெய்தது. தல்லாகுளம், அண்ணாநகா், கோ. புதூா், மாட்டுத்தாவணி, கே.கே.நகா், விரகனூா், பழங்காநத்தம், திருப்பரங்குன்றம், திருநகா், தனக்கன்குளம் உள்ளிட்ட பகுதிகளில் மாலை 6.35 மணி அளவில் இரவு 10.30 மணிக்கு மேலாக மழை பெய்தது. அவ்வப்போது மழை சீற்றம் குறைந்திருந்தது. இருப்பினும், இரவு 9 மணி முதல் 10 மணி வரை பலத்த மழை பெய்தது.

இதேபோல, மேலூா், எழுமலை, உசிலம்பட்டி, பேரையூா் உள்ளிட்ட மாவட்டத்தின் ஊரகப் பகுதிகளிலும் இரவு நேரத்தில் பலத்த மழை பெய்தது.

Story image
மதுரை கீழவாசல் பகுதியில்  வியாழக்கிழமை இரவு மழையினூடே  சென்ற வாகனங்கள்.

மதுரை கீழவாசல் பகுதியில் வியாழக்கிழமை இரவு மழையினூடே சென்ற வாகனங்கள்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.