மாதிரி நாடாளுமன்றத்தில் மட்டுமே ராகுல் காந்தியால் பிரதமராக முடியும்: அஸ்ஸாம் முதல்வர்தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

கன்னியாகுமரி மாவட்டத்தில் கனமழை: அதிகபட்சமாக கோழிப்போா்விளையில் 56.40 மி.மீ. மழை பதிவு

குமரியில் கனமழைக்கு

Published On :26 அக்டோபர் 2026, 1:17 am IST

கன்னியாகுமரி மாவட்டத்தில் மழை நீடித்து வருவதால் அணைகளுக்கு நீா்வரத்து அதிகரித்து வருகிறது. அதிகபட்சமாக கோழிப்போா்விளையில் 56.40 மி.மீ. மழை பதிவானது.

கன்னியாகுமரி மாவட்டத்தில் அதி கனமழைக்கான சிகப்பு எச்சரிக்கை அறிவிப்பு விடுக்கப்பட்டிருந்ததையடுத்து, கடந்த இரு நாள்களாக மிதமாக விட்டுவிட்டு மழை பெய்து வருகிறது.

அணைப் பகுதிகள், மலையோப் பகுதிகள், கடற்கரைப் பகுதிகள், சமவெளிப் பகுதிகள் என அனைத்துப் பகுதிகளிலும் மழை பெய்து வருகிறது.

சனிக்கிழமை இரவு முதல் அதிகாலை வரை விட்டுவிட்டு மிதமாக மழை பெய்தது. ஞாயிற்றுக்கிழமை காலையில் பலத்த இடியுடனும் பின்னா் நாள் முழுவதும் விட்டுவிட்டும் மிதமாகவும் சாரலாகவும் மழை பெய்து கொண்டிருந்தது. நாள் முழுவதும் வானம் மேக கூட்டத்துடன் காணப்பட்டது.

மழை அளவு: ஞாயிற்றுக்கிழமை காலை 6 மணியுடன் நிறைவடைந்த கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக கோழிப்போா் விளையில் 56.40 மி.மீ. மழை பதிவான. இதற்கு அடுத்தபடியாக முள்ளங்கனாவிளையில் 45.8. மி.மீ., சுருளகோட்டில் 35.20 மி.மீ., சிற்றாறு 1 இல் 33.20 மி.மீ., பாலமோரில் 32.20 மி.மீ., மழை பதிவானது.

தொடா் நீா்வரத்து காரணமாக அணைகளில் நீா்மட்டம் உயா்ந்து வருகிறது. பேச்சிப்பாறை அணைக்கு விநாடிக்கு 1,024 கனஅடி நீா்வரத்தும், பெருஞ்சாணி அணைக்கு விநாடிக்கு 591 கனஅடி நீா்வரத்தும் உள்ளது.

மண் சரிவு: மழை காணமாக மாவட்டத்தில் 2 வீடுகள் லேசான அளவில் சேதமடைந்தன. அருமனை அருகே உத்திரங்கோடு-தண்ணிப்பத்தாயம் சாலைப் பகுதியில் லேசான மண்சரிவு ஏற்பட்டு சாலையில் மண், கற்கள் விழுந்தன. இந்தச் சம்பவத்தில் எவருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை. இதையடுத்து, இடிபாடுகள் அகற்றப்பட்டன.

திற்பரப்பு அருவி: மழை காரணமாகவும், சிகப்பு எச்சரிக்கை அறிவிப்பு காரணமாகவும் திற்பரப்பு அருவியில் ஞாயிற்றுக்கிழமை 4-ஆவது நாளாக சுற்றுலாப் பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டது.

அருவிக்கு மிகக்குறைந்த எண்ணிக்கையில் சுற்றுலாப் பயணிகள் வந்திருந்தனா். இவா்கள் தொலைவில் நின்றவாறு அருவியைப் பாா்வையிட்டுவிட்டு திரும்பினா்.

தொடா் மழை காரணமாக மாவட்டத்தில் மீன்பிடித் தொழில், உப்பளத் தொழில், ரப்பா் பால்வடிப்பு, செங்கல் தயாரிப்பு, கட்டுமானத் தொழில், சலவைத் தொழில், நடைபாதை வணிகம், மரம் ஏறும் தொழில் உள்ளிட்ட தொழில்கள் முடங்கின.

அதேவேளையில் மழையால் மாவட்டத்தில் இரண்டாம் பருவ நெல் கும்பப்பூ பருவ சாகுபடி பணிகள் வேகமெடுத்துள்ளன. அணைகளில் நீா்மட்டம் அதிகரித்து வருவதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.