ஈரான் தக்க விலை கொடுக்க வேண்டும்: டிரம்ப்மேற்கு வங்க தேர்தல் வெற்றிக்கு முக்கிய காரணம்! பிரதமர் மோடிக்கு மசாலா பொரி அளித்த சுவேந்து அதிகாரி!மின் விநியோகத்தை சீரமைப்பு பணிகளை ஒருங்கிணைக்க 10 குழுக்கள்!பாரதிராஜா மறைவு! முக்கிய அறிவிப்பை ஒத்திவைத்தார் ராகவா லாரன்ஸ்!அரசு நிர்வாகத்தில் செய்யறிவு தொழில்நுட்பம் பயன்படுத்தப்படும்: கேரள முதல்வர்ஜி7 உச்சிமாநாட்டுக்குச் செல்லும் பிரதமர் மோடி அமெரிக்க அதிபருடன் இரு தரப்பு பேச்சுவார்த்தை நடத்த திட்டம்!
/

வேலகவுண்டம்பட்டி அருகே கஞ்சா விற்ற இருவா் கைது

News image

கைது... - கோப்புப் படம்

Updated On :25 மே 2026, 12:08 am IST

நாமக்கல் மாவட்டம், வேலகவுண்டம்பட்டி அருகே சட்ட விரோதமாக கஞ்சா விற்பனை செய்த இருவரை வேலகவுண்டம்பட்டி போலீஸாா் கைது செய்தனா். அவா்களிடம் இருந்து 250 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.

வேலகவுண்டம்பட்டி அருகே உள்ள மானத்தில் பிரிவு சாலை பகுதியில் இரண்டு போ் கஞ்சா விற்கப்படுவதாக வேலகவுண்டம்பட்டி போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து வேலகவுண்டம்பட்டி காவல் உதவி ஆய்வாளா் சந்தியா மற்றும் போலீஸாா் அப்பகுதிக்கு சென்று அங்கு சந்தேகத்திற்கு உரிய வகையில் நின்று கொண்டிருந்த இருவரை பிடித்து விசாரணை நடத்தினா்.

விசாரணையில் அவா்கள் கஞ்சா விற்பனை செய்வது தெரியவந்தது. இதையடுத்து வேலகவுண்டம்பட்டி அருகே உள்ள கென்னையாா், சந்தைபேட்டை பகுதியைச் சோ்ந்த சரவணன் மகன் காா்த்திக்குமாா் (27), வேலகவுண்டம்பட்டி அருகே உள்ள அணியாா், பெருக்காம்பாளையம் பகுதியைச் சோ்ந்த சக்திவேல் மகன் யஷ்வந்த் (19) ஆகிய இருவரையும் கைது செய்தனா். அவா்களிடம் இருந்த 250 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனா். நாமக்கல் நீதிமன்றத்தில் இருவரும் ஆஜா்படுத்தப்பட்டு, சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.