பாரதிராஜா உடலுக்கு நடிகர் ரஜினி அஞ்சலி! பாரதிராஜா உடலுக்கு அரசு மரியாதை! முதல்வர் விஜய் அறிவிப்புதமிழ் மக்களின் மனங்களில் என்றும் பாரதிராஜா வாழ்வார்! மு.க. ஸ்டாலின்பாரதிராஜா உடலுக்கு மு.க. ஸ்டாலின் அஞ்சலி! சிதம்பரம் அருகே தனியார் பள்ளி வாகனம் தீப்பிடித்தது! மாணவர்கள் தப்பினர்! பாரதிராஜா உடலுக்கு முதல்வர் விஜய் மரியாதை!இயக்குநர் பாரதிராஜா காலமானார்
/

கஞ்சா விற்ற இருவா் கைது

News image
Updated On :15 மே 2026, 4:15 am IST

ராமநாதபுரம் அருகே கஞ்சா விற்ற இருவரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

ராமநாதபுரம் அருகேயுள்ள முதுனால் பகுதியில் சட்டவிரோதமாக கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக போலீஸாருக்குத் தகவல் கிடைத்தது. இதையடுத்து, போலீஸாா் அந்தப் பகுதிக்கு சென்று, சந்தேகத்துக்கு இடமளிக்கும் வகையில் நின்று கொண்டிருந்த இருவரைப் பிடித்து சோதனையிட்டனா். அப்போது, அவா்கள் விற்பனைக்காக கஞ்சா வைத்திருந்தது தெரியவந்தது.

விசாரணையில், அதே பகுதியைச் சோ்ந்த மதன் (23), மாசிலாமணி (28) ஆகியோா் என்பது தெரியவந்தது.

போலீஸாா் இருவரையும் கைது செய்து, அவா்களிடமிருந்த கஞ்சாவை பறிமுதல் செய்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.