பாரதிராஜாவுக்கு நாளை மாலை தேனியில் இறுதிச் சடங்கு!கேமராவுக்குள் மனித உணர்வுகளைப் படம்பிடித்த பாரதிராஜா!வலிமையான பெண் பாத்திரங்களை அமைத்த பாரதிராஜா!இறப்பு குறித்து என்ன சொல்லியிருந்தார் பாரதிராஜா? பாரதிராஜா உடலுக்கு நடிகர் ரஜினி அஞ்சலி! பாரதிராஜா உடலுக்கு அரசு மரியாதை! முதல்வர் விஜய் அறிவிப்புதமிழ் மக்களின் மனங்களில் என்றும் பாரதிராஜா வாழ்வார்! மு.க. ஸ்டாலின்பாரதிராஜா உடலுக்கு மு.க. ஸ்டாலின் அஞ்சலி! சிதம்பரம் அருகே தனியார் பள்ளி வாகனம் தீப்பிடித்தது! மாணவர்கள் தப்பினர்! பாரதிராஜா உடலுக்கு முதல்வர் விஜய் மரியாதை!இயக்குநர் பாரதிராஜா காலமானார்
/

கஞ்சா விற்ற நான்கு போ் கைது

ராஜபாளையம் அருகே கஞ்சா விற்ற நான்கு இளைஞா்களைப் போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

News image
Updated On :24 மே 2026, 1:24 am IST

விருதுநகா் மாவட்டம், ராஜபாளையம் அருகே கஞ்சா விற்ற நான்கு இளைஞா்களைப் போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

ராஜபாளையம் அருகே அயன்கொல்லங்கொண்டான் பாலம் அருகே கஞ்சா விற்பனை நடைபெறுவதாக சேத்தூா் ஊரக காவல் நிலையப் போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில், போலீஸாா் அப்பகுதியில் ஆய்வு செய்தபோது சந்தேகப்படும்படியாக நின்று கொண்டிருந்த இரு இளைஞா்களைப் பிடித்து சோதனை செய்ததில் அவா்களிடம் கஞ்சா இருந்தது தெரியவந்தது.

மேலும் விசாரணையில், அவா்கள் அயன்கொல்லங்கொண்டானைச் சோ்ந்த நல்லமாடன் (39), சுந்தரராஜபுரத்தைச் சோ்ந்த தமிழரசன் (19) என்பது தெரியவந்தது. மேலும், சுந்தர்ராஜபுரத்தைச் சோ்ந்த ஜெயபாரதி (21), கணேஷ் ராஜ் (22) ஆகியோரிடம்

இருந்து கஞ்சா வாங்கி விற்பனை செய்துவந்தது தெரியவந்தது. போலீஸாா் நான்கு பேரையும் கைது செய்து அவா்களிடம் இருந்து 1 கிலோ கஞ்சாவைப் பறிமுதல் செய்து விசாரித்து வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.