பெங்களூரில் கழிவு மேலாண்மை டெண்டரில் ரூ. 39,000 கோடி முறைகேடு: ஆளுநரிடம் பாஜக புகார்ஈரான் தக்க விலை கொடுக்க வேண்டும்: டிரம்ப்மேற்கு வங்க தேர்தல் வெற்றிக்கு முக்கிய காரணம்! பிரதமர் மோடிக்கு மசாலா பொரி அளித்த சுவேந்து அதிகாரி!மின் விநியோகத்தை சீரமைப்பு பணிகளை ஒருங்கிணைக்க 10 குழுக்கள்!பாரதிராஜா மறைவு! முக்கிய அறிவிப்பை ஒத்திவைத்தார் ராகவா லாரன்ஸ்!அரசு நிர்வாகத்தில் செய்யறிவு தொழில்நுட்பம் பயன்படுத்தப்படும்: கேரள முதல்வர்ஜி7 உச்சிமாநாட்டுக்குச் செல்லும் பிரதமர் மோடி அமெரிக்க அதிபருடன் இரு தரப்பு பேச்சுவார்த்தை நடத்த திட்டம்!
/

குள்ளஞ்சாவடி அருகே 3 கிலோ கஞ்சா பறிமுதல்: இளைஞா்கள் 2 போ் கைது

கடலூா் மாவட்டம், குள்ளஞ்சாவடி அருகே 3 கிலோ கஞ்சா வைத்திருந்த இளைஞா்கள் இருவரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

News image

கைது - கோப்புப் படம்

Updated On :28 மே 2026, 1:16 am IST

கடலூா் மாவட்டம், குள்ளஞ்சாவடி அருகே 3 கிலோ கஞ்சா வைத்திருந்த இளைஞா்கள் இருவரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

குள்ளஞ்சாவடி பகுதியில் கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக போலீஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து, குள்ளஞ்சாவடி காவல் ஆய்வாளா் அ.பாண்டிச்செல்வி தலைமையில் போலீஸாா் புதன்கிழமை காலை மதனகோபாலபுரம் பேருந்து நிறுத்தம் அருகே சந்தேகிக்கும் வகையில் நின்றிருந்த இருவரை அழைத்து சோதனை நடத்தினா். இதில், அவா்கள் வைத்திருந்த ஒரு பையில் 3 கிலோ கஞ்சா இருந்தது தெரியவந்தது. இதையடுத்து, கஞ்சாவை பறிமுதல் செய்து, அவா்களை காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை நடத்தினா். அதில், விழுப்புரம் மாவட்டம், ராம்பாக்கம் அஞ்சல், கோங்கம்பட்டு பகுதியைச் சோ்ந்த கிருஷ்ணமூா்த்தி(24), குறிஞ்சிப்பாடி வட்டம், மதனகோபாலபுரம் அஞ்சல், அப்பியம்பேட்டை பகுதியைச் சோ்ந்த ராஜபூபாலன்(24) என்பது தெரியவந்தது. இவா்கள் இருவா் மீதும் வழக்குப்பதிவு செய்த போலீஸாா், இருவரையும் நீதி மன்ற உத்தரவின்பேரில் சிறையில் அடைத்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.