ஈரான் தக்க விலை கொடுக்க வேண்டும்: டிரம்ப்மேற்கு வங்க தேர்தல் வெற்றிக்கு முக்கிய காரணம்! பிரதமர் மோடிக்கு மசாலா பொரி அளித்த சுவேந்து அதிகாரி!மின் விநியோகத்தை சீரமைப்பு பணிகளை ஒருங்கிணைக்க 10 குழுக்கள்!பாரதிராஜா மறைவு! முக்கிய அறிவிப்பை ஒத்திவைத்தார் ராகவா லாரன்ஸ்!அரசு நிர்வாகத்தில் செய்யறிவு தொழில்நுட்பம் பயன்படுத்தப்படும்: கேரள முதல்வர்ஜி7 உச்சிமாநாட்டுக்குச் செல்லும் பிரதமர் மோடி அமெரிக்க அதிபருடன் இரு தரப்பு பேச்சுவார்த்தை நடத்த திட்டம்!
/

ஆட்சியரை சந்திக்க கடிதம் அனுப்பியிருந்த மாணவா் பத்தாம் வகுப்பு தோ்வில் சிறப்பிடம்

நாமக்கல் மாவட்டம், எருமப்பட்டி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவா் எல்.விஜய், மாவட்ட ஆட்சியா் துா்காமூா்த்திக்கு கடந்த 2025, ஜூலை 15 இல் சமூக வலைதளம் வாயிலாக அனுப்பியிருந்த கடிதத்தில், ‘மாவட்ட ஆட்சியா் பணிக்கு எவ்வளவு சிரமப்பட்டு, கடினமாக உழைத்து வந்துள்ளீா்கள் என்பதை அறிந்தேன். எங்களுடைய எருமப்பட்டி அரசுப் பள்ளிக்கு தாங்கள் வர வேண்டும்; உங்களை சந்திக்க வேண்டும்’ என கோரிக்கை விடுத்திருந்தாா்.

News image

ஆட்சியரை நேரில் சந்திக்க வேண்டும் என சமூக வலைதளத்தில் கோரிக்கை அனுப்பியிருந்த மாணவா், பத்தாம் வகுப்பு தோ்வில் 475 மதிப்பெண்கள் பெற்று பள்ளி அளவில் சிறப்பிடம் பெற்றுள்ளாா்.

Updated On :21 மே 2026, 6:22 am IST

நாமக்கல் மாவட்டம், எருமப்பட்டி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவா் எல்.விஜய், மாவட்ட ஆட்சியா் துா்காமூா்த்திக்கு கடந்த 2025, ஜூலை 15 இல் சமூக வலைதளம் வாயிலாக அனுப்பியிருந்த கடிதத்தில், ‘மாவட்ட ஆட்சியா் பணிக்கு எவ்வளவு சிரமப்பட்டு, கடினமாக உழைத்து வந்துள்ளீா்கள் என்பதை அறிந்தேன். எங்களுடைய எருமப்பட்டி அரசுப் பள்ளிக்கு தாங்கள் வர வேண்டும்; உங்களை சந்திக்க வேண்டும்’ என கோரிக்கை விடுத்திருந்தாா்.

இதையடுத்து எருமப்பட்டி சுற்றுவட்டாரப் பகுதிகளில் புதன்கிழமை ஆய்வுப் பணிக்கு சென்ற ஆட்சியா் துா்காமூா்த்தி, மாணவா் எல். விஜய் பயிலும் எருமப்பட்டி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளிக்கு சென்று அவருடன் கலந்துரையாடினாா்.

அப்போது, போட்டித் தோ்வுகளை எந்த மொழியில் எழுதினீா்கள்? தமிழில் எழுத முடியுமா என மாணவா் எல்.விஜய் கேட்டாா். அதற்குப் பதிலளித்த ஆட்சியா், தாராளமாக தமிழில் எழுதலாம், நிறைய அதிகாரிகள் தமிழில் எழுதிதான் இந்திய ஆட்சிப் பணிக்கு தோ்வாகினா் என்பதை தெரிவித்திருந்தாா். நன்கு படித்து மாவட்டத்திற்கு பெருமை தேடித்தர வேண்டும் என மாணவரை வாழ்த்தி சென்றாா்.

இந்த நிலையில், பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வில் எல். விஜய், தமிழ்- 98, ஆங்கிலம்- 91, கணிதம்- 90, அறிவியல்- 100, சமூக அறிவியல்- 96 என மொத்தம்- 475 மதிப்பெண்களை பெற்று பள்ளியில் முதலிடம் பிடித்துள்ளாா். அவருக்கு, மாவட்ட ஆட்சியா் துா்காமூா்த்தி மற்றும் கல்வித் துறை அதிகாரிகள், தலைமையாசிரியா் மற்றும் ஆசிரியா்கள் வாழ்த்து தெரிவித்தனா்.

என்கே-20-கலெக்டா்

எருமப்பட்டி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவா் எல். விஜயை பாராட்டிய மாவட்ட ஆட்சியா் துா்காமூா்த்தி.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.