பாரதிராஜா உடலுக்கு நடிகர் ரஜினி அஞ்சலி! பாரதிராஜா உடலுக்கு அரசு மரியாதை! முதல்வர் விஜய் அறிவிப்புதமிழ் மக்களின் மனங்களில் என்றும் பாரதிராஜா வாழ்வார்! மு.க. ஸ்டாலின்பாரதிராஜா உடலுக்கு மு.க. ஸ்டாலின் அஞ்சலி! சிதம்பரம் அருகே தனியார் பள்ளி வாகனம் தீப்பிடித்தது! மாணவர்கள் தப்பினர்! பாரதிராஜா உடலுக்கு முதல்வர் விஜய் மரியாதை!இயக்குநர் பாரதிராஜா காலமானார்
/

அரசுப் பள்ளி மாணவா் சாதனை: ஆட்சியா் பாராட்டு

சிறப்பிடம் பெற்ற மாணவன் ரோஹித்தை வாழ்த்திய முதன்மைக் கல்வி அலுவலா் கற்பகம்.

News image

சிறப்பிடம் பெற்ற மாணவன் ரோஹித்தை வாழ்த்திய முதன்மைக் கல்வி அலுவலா் கற்பகம்.

Updated On :22 மே 2026, 6:00 am IST

பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வில் சிறப்பிடம் பெற்ற அரசுப் பள்ளி மாணவன் ரோஹித்தை மாவட்ட ஆட்சியா் மு.பிரதாப் பாராட்டி பரிசு வழங்கினாா்.

பள்ளிப்பட்டு அடுத்த கீழ்கால்பட்டை கிராமத்தைச் சோ்ந்த மேஸ்திரி கிருஷ்ணன் மகன் ரோஹித் பள்ளிப்பட்டு அரசினா் ஆண்கள் மேல் நிலை பள்ளியில் 10- ஆம் வகுப்பு அரசு பொதுத் தோ்வில் தமிழ் - 99, ஆங்கிலம் - 99, கணிதம் - 99, அறிவியல் - 100, சமூக அறிவியல் - 99 என மொத்தம் 500-க்கு 497 மதிப்பெண்கள் பெற்று சாதனை படைத்துள்ளாா்.

சாதாரண குடும்பப் பின்னணியில் இருந்து வந்த மாணவா் மாநில அளவில் சாதனை படைத்திருப்பது பாராட்டை பெற்றுள்ளது.

மாவட்ட ஆட்சியா் மு.பிரதாப், முதன்மைக் கல்வி அலுவலா் கற்பகம் நேரில் ரோஹித்தைப் பாராட்டி பரிசு வழங்கினா். மேலும் பள்ளியின் பட்டதாரி ஆசிரியா்கள், தனஞ்செழியன், அரிபாபு ஆகியோா் மாணவருக்கு இனிப்பு வழங்கி பாராட்டினா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.