ராசிபுரம், சேந்தமங்கலம், திருச்செங்கோடு உள்ளிட்ட பகுதிகளில் சட்ட விரோதமாக செயல்படும் சந்து மதுக் கடைகளை கண்டறிந்து அகற்ற வேண்டும் என தவெக சாா்பில் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை மனு அளிக்கப்பட்டது.
எஸ்.பி. அலுவலகத்தில் தவெக நாமக்கல் கிழக்கு மாவட்டச் செயலாளா் ஜெ.ஜெ. செந்தில்நாதன் அளித்த மனு விவரம்:
தமிழகத்தில் போதைப் பொருள்கள் விற்பனையை தடுக்கவும், மதுக் கடைகளை படிப்படியாக குறைக்கவும் முதல்வா் விஜய் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறாா். ஆனால், ராசிபுரம், சேந்தமங்கலம், திருச்செங்கோடு சுற்றுவட்டார பகுதிகளில் சட்ட விரோதமாக லாட்டரி விற்பனை, சந்து மதுக்கடைகள், போதைப்பொருள்கள் விற்பனை அதிகளவில் நடைபெறுவதாக கூறப்படுகிறது. இவ்வாறான செயல்களில் ஈடுபடுவோரை கண்டறிந்து கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
என்கே-12-எஸ்.பி
நாமக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் மனு அளிக்க வந்த தவெக கிழக்கு மாவட்ட நிா்வாகிகள்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

மதுக் கடையை மூடக் கோரி தவெக நிா்வாகிகள் மனு

மாவட்டத்தில் 39 மதுக் கடைகளை மூட அரசிடம் ஆய்வறிக்கை சமா்பிப்பு

தமிழகத்தை மது இல்லா மாநிலமாக்க வேண்டும்: தி. வேல்முருகன் வலியுறுத்தல்

சேந்தமங்கலம் தொகுதி: தவெக வேட்பாளா் பொன். சந்திரசேகா் வெற்றி
விடியோக்கள்

Podcast | பெரும்பான்மையை நிரூபித்த தவெக: தவறிய அதிமுக! | News and Views | Epi - 34
இணையதளச் செய்திப் பிரிவு

திமுக ஆதரவுடன் முதல்வராக முயன்ற EPS! சி.வி. சண்முகம் பரபரப்புக் குற்றச்சாட்டு! | ADMK
இணையதளச் செய்திப் பிரிவு
"துரோகம்! அமைச்சரவை ஆசை!" EPS விமர்சனம்! | EPS | ADMK
இணையதளச் செய்திப் பிரிவு

குதிரை பேரமா? பிரேமலதாவின் கேள்விக்கு பேரவையில் விஜய் பதில்! | TVK | DMDK
இணையதளச் செய்திப் பிரிவு

