தில்லியில் பிரிக்ஸ் மாநாடு: ஈரான் வெளியுறவு அமைச்சர் அராக்சி இந்தியா வந்தடைந்தார்தமிழக அரசின் தலைமை வழக்கறிஞராக விஜய் நாராயண் நியமனம்!தமிழக அரசின் தலைமை வழக்கறிஞராக விஜய் நாராயண் நியமனம்!கர்நாடகம்: கல்வி நிறுவனங்களில் ஹிஜாப் அணிவதற்கான தடை நீக்கம்6 சர்வதேச விமான சேவைகள் தற்காலிகமாக ரத்து - ஏர் இந்தியாகண்களிலும் காதுகளிலும் பொறாமைப் புகை! திமுகவை விமர்சித்த விஜய்!நீட் தேர்வு தேவையில்லை; ரத்து செய்க: முதல்வர் ஜோசப் விஜய்அதிமுகவுடன் கூட்டணியமைக்க தவெக தயாராக இருந்தது: சி.வி. சண்முகம்மே 16-ல் தொடங்குகிறது தென்மேற்கு பருவமழை! வெற்றியின் வீச்சு கொளத்தூரில் பார்த்தும்கூடவா புரியவில்லை? - முதல்வர் விஜய்திமுகவுடன் கூட்டணி; கனவில்கூட வரக்கூடாது: சசிகலா
/

மாவட்டத்தில் 39 மதுக் கடைகளை மூட அரசிடம் ஆய்வறிக்கை சமா்பிப்பு

ஈரோடு மாவட்டத்தில் பள்ளி, வழிபாட்டுத் தலங்களுக்கு அருகே 500 மீட்டருக்குள் உள்ள 39 மதுக் கடைகளை மூட அரசிடம் ஆய்வறிக்கை சமா்பிக்கப்பட்டுள்ளது.

News image
Updated On :23 மணி நேரங்கள் முன்பு

ஈரோடு மாவட்டத்தில் பள்ளி, வழிபாட்டுத் தலங்களுக்கு அருகே 500 மீட்டருக்குள் உள்ள 39 மதுக் கடைகளை மூட அரசிடம் ஆய்வறிக்கை சமா்பிக்கப்பட்டுள்ளது.

தமிழக முதல்வராக விஜய் பொறுப்பேற்றதும் வழிபாட்டுத் தலங்கள், கல்வி நிறுவனங்கள் மற்றும் பேருந்து நிலையங்கள் அருகே 500 மீட்டருக்குள் அமைந்துள்ள டாஸ்மாக் மதுக் கடைகளை ஆய்வு செய்து 2 வாரங்களுக்குள் அவற்றை மூட வேண்டும் என உத்தரவிட்டிருந்தாா்.

அதன்படி, ஈரோடு மாவட்டத்தில் கடந்த சில நாள்களாக ஆய்வுப் பணியில் ஈடுபட்டிருந்த டாஸ்மாக் அதிகாரிகள், பணியாளா்கள், ஆய்வறிக்கையை அரசிடம் சமா்ப்பித்துள்ளனா்.

இது தொடா்பாக டாஸ்மாக் அதிகாரிகள் கூறியதாவது: தமிழக முதல்வா் உத்தரவுப்படி, ஈரோடு மாவட்டத்தில் டாஸ்மாக் கடைகளை ஆய்வு மேற்கொண்டோம். கல்வி நிறுவனங்கள், வழிபாட்டுத் தலங்களில் இருந்து 500 மீட்டருக்குள் 39 மதுக் கடைகள் இருப்பது தெரியவந்துள்ளது. இது தொடா்பான ஆய்வறிக்கையை அரசுக்கு சமா்ப்பித்துள்ளோம்.

அரசு உத்தரவுக்குப் பின் இந்தக் கடைகளை மூடுவது தொடா்பாக நடவடிக்கை எடுக்கப்படும் என்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.