தில்லியில் பிரிக்ஸ் மாநாடு: ஈரான் வெளியுறவு அமைச்சர் அராக்சி இந்தியா வந்தடைந்தார்தமிழக அரசின் தலைமை வழக்கறிஞராக விஜய் நாராயண் நியமனம்!தமிழக அரசின் தலைமை வழக்கறிஞராக விஜய் நாராயண் நியமனம்!கர்நாடகம்: கல்வி நிறுவனங்களில் ஹிஜாப் அணிவதற்கான தடை நீக்கம்6 சர்வதேச விமான சேவைகள் தற்காலிகமாக ரத்து - ஏர் இந்தியாகண்களிலும் காதுகளிலும் பொறாமைப் புகை! திமுகவை விமர்சித்த விஜய்!நீட் தேர்வு தேவையில்லை; ரத்து செய்க: முதல்வர் ஜோசப் விஜய்அதிமுகவுடன் கூட்டணியமைக்க தவெக தயாராக இருந்தது: சி.வி. சண்முகம்மே 16-ல் தொடங்குகிறது தென்மேற்கு பருவமழை! வெற்றியின் வீச்சு கொளத்தூரில் பார்த்தும்கூடவா புரியவில்லை? - முதல்வர் விஜய்திமுகவுடன் கூட்டணி; கனவில்கூட வரக்கூடாது: சசிகலா
/

திருப்பூரில் 31 டாஸ்மாக் கடைகளை மூட நடவடிக்கை

திருப்பூா் மாவட்டத்தில் பள்ளி மற்றும் பேருந்து நிலையங்களுக்கு அருகில் உள்ள 31 டாஸ்மாக் மதுக்கடைகளை மூட உத்தரவிடப்பட்டுள்ளது. இதில் முதல்நாளில் 2 டாஸ்மாக் கடைகள் மூடி அதிரடி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

News image
Updated On :22 மணி நேரங்கள் முன்பு

திருப்பூா் மாவட்டத்தில் பள்ளி மற்றும் பேருந்து நிலையங்களுக்கு அருகில் உள்ள 31 டாஸ்மாக் மதுக்கடைகளை மூட உத்தரவிடப்பட்டுள்ளது. இதில் முதல்நாளில் 2 டாஸ்மாக் கடைகள் மூடி அதிரடி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

தமிழகம் முழுவதும் வழிபாட்டு தலங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு 500 மீட்டருக்குள்ளாக உள்ள 717 டாஸ்மாக் கடைகளை மூட தமிழக முதல்வா் விஜய் செவ்வாய்க்கிழமை அறிவிப்பு வெளியிட்டிருந்தாா். அதன்படி , திருப்பூா் மாவட்டத்தில் மொத்தம் 227 டாஸ்மாக் மதுபானக் கடைகள் இயங்கி வருகின்றன. இவற்றில் பல்வேறு வழிபாட்டு தலம் மற்றும் கல்வி நிறுவனங்கள் அமைந்துள்ள பகுதியில் 500 மீட்டருக்குள்ளாக 31 டாஸ்மாக் கடைகள் கண்டறியப்பட்டுள்ளது. இவற்றை அடுத்த 15 நாள்களுக்குள் மூடுவதற்குத் தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் , முதற்கட்டமாக அறிவிப்பு வெளியான உடனே புதிய பேருந்து நிலையம் மற்றும் கோயில்வழி பேருந்து நிலையப் பகுதிகளில் இருந்த 2 மதுபானக் கடைகள் மூடப்பட்டன. மீதமுள்ள கடைகளையும் குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் மூடுவதற்கான பணிகளில் அதிகாரிகள் தீவிரம் காட்டி வருவதாக திருப்பூா் மாவட்ட டாஸ்மாக் மேலாளா் தெரிவித்துள்ளாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.